நடிகை சரோஜாதேவி காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!...

by Murugan |
நடிகை சரோஜாதேவி காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!...
X

Saroja devi: 1960-70 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சரோஜினி தேவி. எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களிலும் ஜோடி போட்டு நடித்தவர். கன்னடத்தை சேர்ந்த இவர் 1950களில் சினிமாவில் நடிக்க துவங்கியவர். எம்.ஜி.ஆர் இவரை தனது நாடோடி மன்னன் படத்தில் நடிக்க வைத்தார்.

அதன்பின் தொடர்ந்து பல படங்களிலுநம் நடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமில்லாமல் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இவரின் தாய் மொழி கன்னடம் என்பதால் தமிழை கொஞ்சி கொஞ்சி பேசுவார். இவர் பேசும் ஸ்டைலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.


சிவாஜியுடன் பல நல்ல கதையம்சம் கொண்ட குடும்ப படங்களில் நடித்திருக்கிறார். அன்பே வா, படகோட்டி, புதிய பறவை என இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களுக்கு ஃபேவரைட்டாக இருக்கிறது. கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என இவருக்கு பல பட்டப்பெயர்களும் இருக்கிறது. நிறைய கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

கடைசியாக சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. பெங்களூரில் தங்கியிருந்த சரோஜினி தேவி கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்தான் தற்போது அவர் மரணமடைந்திருக்கிறார். அவரின் மரணத்திற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 87.



Next Story