குட் பேட் அக்லி பார்த்து மிரண்டு போன பாலையா!.. ஆதிக்குக்கு அடிச்ச செம லக்!..

by MURUGAN |
குட் பேட் அக்லி பார்த்து மிரண்டு போன பாலையா!.. ஆதிக்குக்கு அடிச்ச செம லக்!..
X

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து அவரின் ரசிகர்களை 100 சதவீதம் திருப்திப்படுத்திய படம்தான் குட் பேட் அக்லி. ஏனெனில், இந்த படத்திற்கு முன் வெளியான விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. எனவே, அப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.

ஆனால், அடுத்து வந்த குட் பேட் அக்லி படத்தில் ரசிகர்கள் அஜித்தை எப்படி பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்களோ அதை அப்படியே காட்டியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். மங்காத்தா, பில்லா படத்திற்கு பின் ஒரு பக்கா மாஸ் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருந்தார் அஜித்.


எனவே, இப்[படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இப்படம் 250 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்காமல், தன்னை நிரூபிக்க முடியாமல் ஆதிக் சோர்வில் இருந்தபோது ‘நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம்’ என சொல்லி நம்பிக்கை கொடுத்தார் அஜித்.

அந்த உற்சகாத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படத்தை எடுத்து ஹிட் கொடுத்தார். இந்த படத்தின் வெற்றிதான் குட் பேட் அக்லி உருவாக காரணமாக இருந்தது. அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவரின் இயக்கத்தில் தொடர்ந்து சில படங்கள் நடிப்பார். எனவே, அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் பார்த்து மிரண்டு போய்விட்டாராம். இது நம்ம ஸ்டைல் ஆச்சே.. தூக்குடா அந்த செல்லத்த’ என சொல்ல மாமனார் பிரபுவோடு ஆந்திரா சென்று பாலையாவை பார்த்திருக்கிறார் ஆதிக். சிவாஜி மகனோடு ஆதிக் வந்ததில் மேலும் உற்சாகம் அடைந்த பாலையா ‘உங்கள் இயக்கத்தில் நான் ஒரு படம் நடிக்கிறேன். கதையை ரெடி பண்ணுங்க’ என சொல்லிவிட்டாராம்.

ஆனால், இதை முடிவு செய்வது அஜித்தான் என சொல்லப்படுகிறது. தன்னுடைய அடுத்த பட இயக்குனர் ஆதிக் என முடிவு செய்துவிட்டால் அதை ஆதிக் தட்ட முடியாது. ஒருவேளை அஜித்தின் முடிவு வேறாக இருந்தால் பாலையாவை ஆதிக் இயக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Next Story