புது பட அப்டேட்!.. அடக்கி வாசிக்கும் அஜித்!. அப்செட்டில் தயாரிப்பாளர்!....

by MURUGAN |
ajithrace
X

ajithrace

Ajithkumar 64: அஜித்தின் குட் பேட் அக்லி இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியானது. ஆனால், இந்த படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ள போய்விட்டார். அடுத்து அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் அட்பேட் எப்போது வெளியாகும் என அஜித்தின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆனால், அஜித்தோ கூலாக கார் ரேஸில் இருக்கிறார். விஜய்க்கு இருப்பது போலவே அஜித்திற்கும் ரசிகர்கள் அதிகம். அஜித் படத்தின் புதுப்புது அப்டேட்டுகளுக்காக அவர்கள் காத்திருப்பார்கள். ஆனால், அஜித்தோ எந்த அப்டேட்டையும் கொடுக்க வேண்டாம் என சொல்லிவிடுவார். அவரின் வலிமை படத்திற்கு 2 வருடங்கள் காத்திருந்தார்கள் ரசிகர்கள். எனவே, எல்லா இடத்திலும் வலிமை அப்டேட் என்கிற வாசகம் பிரபலமானது.


தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யப்போன எடப்பாடி பழனிச்சாமி, வானதி சீனிவாசன் ஆகியோரிடம் கூட அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டார்கள். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வலிமை அப்டேட் என எழுதிய பதாகைகளை தூக்கிப்பிடித்தபடி நின்றார்கள். ஒருகட்டத்தில் அஜித்தே கடுப்பாகி ‘இப்படியெல்லாம் செய்யாதீர்கள்’ என அறிக்கையே விட்டார்.

ஆனால், அதன்பின்னரும் அஜித் மாறவில்லை. அவரின் விடாமுயற்சி பற்றி படம் துவங்கப்படுவதாக செய்தி வெளியாகி பல மாதங்கள் கழித்தே ஒரு மொக்கையான போஸ்டரை வெளியிட்டார்கள். விடாமுயற்சி படம் பெரிய வெற்றியை பெறவும் இல்லை. ஆனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்துவிட்டது.

அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் என்பவர் தயாரிக்கவுள்ளார். இவர் பிரபல வினியோகஸ்தராக இருப்பவர். குட் பேட் அக்லி படத்தையும் இவர்தான் வாங்கி வெளியிட்டார்.


இந்நிலையில், இந்த படம் தொடர்பான அப்டேட்டை இப்போது வெளியிட வேண்டாம் என அஜித் சொல்லிவிட்டாராம். ஷூட்டிங் துவங்க இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது.. அப்புறம் பாத்துக்கலாம் என்பது அவரின் மனநிலையாக இருக்கிறது. ஆனால், அறிவிப்பை வெளியிட்டால்தான் வியாபாரம் தொடர்பான வேலைகள் நடக்கும் மற்றும் மற்ற பணிகளை இயக்குனர் பார்ப்பார்.. இப்படி சொன்னால் எப்படி?’ என புலம்பி வருகிறாராம் தயாரிப்பாளர்.

Next Story