புது படத்துக்கு அஜித் வாங்கும் சம்பளம்!. பட்ஜெட் மட்டும் இவ்வளவு கோடியா?!...

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் சரியாக போகாத நிலையில் இந்த படம் அஜித்துக்கு கை கொடுத்தது. ஏனெனில் ரசிகர்கள் அஜித்திடம் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருந்து. ஒரு பக்கா மாஸ், ஆச்ஷன் படமாக குட் பேட் அக்லி உருவாகியிருக்கிறது.
விடாமுயற்சி படத்தில் வில்லன் குரூப்பிடம் மாட்டிகொண்டு அடிவாங்கிய அஜித்தை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, மாஸாக வெளிவந்த குட் பேட் அக்லி படம் அஜித்திக்கு முழு திருப்தியை கொடுத்தது. அஜித் ஒரு பக்கம் சினிமா, ஒரு பக்கம் கார் ரேஸ் என பயணித்து வருகிறார்.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்துவிட்டுதான் அவர் கார் ரேஸில் கலந்துகொள்ளப்போனார். இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை அவருக்கு அங்கே கார் ரேஸ் இருக்கிறது. அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் நடிக்கவுள்ள புதிய படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார்.

இந்த படத்தை வேல் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வரும் நவம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. அதோடு பிப்ரவரி மாத இறுதிக்குள் ஷூட்டிங் முடிந்துவிடும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் அஜித்தின் சம்பளம் 180 கோடி எனவும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 12 கோடி சம்பளம் எனவும் சொல்கிறார்கள்.
இவர்கள் இருவரின் சம்பளமுமே 192 கோடி என்கிற நிலையில் மொத்தமாக 260 கோடிக்குள் படத்தை முடித்துவிடுகிறேன் என ஆதில் சொல்லி இருக்கிறாராம். ஆனால், எப்படியும் 280லிருந்து 300 கோடி வரை ஆகும் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு மீண்டும் மார்ச் மாதம் ரேஸுக்கு போகவிருக்கிறார் அஜித்.
மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி போல இந்த படமும் பக்கா மாஸ் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.