ரஜினியோட எல்லா படமும் எங்களுக்கு நஷ்டம்தான்!.. புலம்பும் தயாரிப்பாளர்!...

Rajinikanth: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் பல வருடங்களாக இருந்தவர் ரஜினி மட்டுமே. ஏன் இருந்தார் எனில் கடந்த சில வருடங்களில் நடிகர் விஜய் ரஜினியின் இடத்தை தாண்டிவிட்டார். அதாவது ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். அதேபோல், அவரின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலையும் பெறுகிறது.
அதனால்தான் வாரிசு பட விழாவில் சிலர் விஜயை சூப்பர் ஸ்டார் என பேசினார்கள். சினிமா உலகை பொறுத்தவரை யாருடைய படங்கள் அதிக வசூலை பெறுகிறதோ அவரே சூப்பர்ஸ்டார். சூப்பர்ஸ்டார் பதவி நிரந்தரமில்லை என 20 வருடங்களுக்கு முன்பே ரஜினி ஒரு விழாவில் பேசினார். ஆனாலும், ரஜினி தன்னுடைய இடத்தை விட்டுவிடக்கூடாது என போராடி வருகிறார்.
எந்திரன், 2.0 படங்களுக்கு பின் ரஜினிக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது ஜெயிலர் மட்டுமே. அவரின் லிங்கா, குசேலன், பாபா, தர்பார், அண்ணாத்த, லால் சலாம், வேட்டையன் போன்ற படங்கள் ஹிட் அடிக்கவில்லை. இந்த இடைவெளியில்தான் விஜய் அவரை ஓவர்டேக் செய்தார்.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கோலி படத்தில் நடித்துவிட்டு அடுத்து நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதேபோல், இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த பல வருடங்களாகவே ரஜினியின் படங்களை ஆந்திராவில் ரிலீஸ் செய்து வரும் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் சிரிஷ் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அண்ணாத்த படத்தால் எங்களுக்கு பெரிய நஷ்டம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு ரூபாய் கூட இழப்பீடு கொடுக்கவில்லை. ஜெயிலரை தவிர ஆந்திராவில் நாங்கள் ரிலீஸ் செய்த எல்லா ரஜினி படங்களுமே நஷ்டத்தையே கொடுத்தது’ என சொல்லியிருக்கிறார்.
ரஜினியின் கூலி படத்தில் நாகார்ஜுனா இருக்கிறார். அதேபோல், ஜெயிலர் 2-வில் பாலையா இருக்கிறார். எனவே இந்த இரண்டு படங்களும் ஆந்திராவில் வசூலை அள்ளும் என்றே கணிக்கப்படுகிறது.