கூலி ரிலீஸ் தேதி!.. ரெண்டு பக்கமும் அனிருத்துக்கு வந்த நெருக்கடி!. எப்படி சமாளிப்பாரோ!...

Coolie: தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளராக மாறியிருப்பவர் அனிருத். இளையராஜாவை ஓரங்கட்டி ஏ.ஆர்.ரஹ்மான் வந்தது போல் ரஹ்மானை ஓரம் கட்டி அனிருத் வந்தார். ஜனரஞ்சகமான இசையில் ரசிகர்களை கவர்ந்து பல படங்கள் ஹிட் அடிக்க காரணமாக இருந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தனுஷுடன் இணைந்து இவர் உருவாக்கிய ஒய் திஸ் கொலவெறி பாடல் ஆல்பம் உலகம் முழுவதும் ஹிட் அடித்தது.
எனவே அனிருத் முதன் முதலில் இசையமைத்த 3 படத்தில் இந்த பாடலை வைத்தார்கள். துவக்கத்தில் தனுஷ் நடிக்கும், தயாரிக்கும் படங்களுக்கு இசையமைத்தாலும் அதன்பின் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார். அனிருத்தின் இசை இளசுகளிடம் வரவேற்பை பெற்றது.
ஒருகட்டத்தில் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க துவங்கி நம்பர் ஒன் இசையமைப்பாளராக மாறினர். அனிருத் வந்த பின் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படங்களே குறைந்து போனது. எப்போது ரஹ்மானை தனது படங்களுக்கு இசையமைக்க வைக்கும் ஷங்கரே இந்தியன் 2 படத்தில் அனிருத்தை இசையமைக்க வைத்தார்.

அனிருத்தின் கையில் எப்போதும் பல படங்கள் இருக்கிறது. எனவே, புதிதாக வரும் படங்களுக்கு இசையமைக்க நேரம் இல்லாமல் இருக்கிறார். அதன் காரணமாக பல படங்களுக்கு இசையமைக்க நேரமில்லை எனவும் அவர் சொல்லி வருகிறார். லோகேஷ் கனகராஜின் கூலி மற்றும் நெல்சனின் ஜெயிலர் 2 படங்களுக்கு அனிருத்தான் இசை.
கூலி படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்டு 14ம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் ஒரே ஒரு பாடலை மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்து புதிய பாடல்கள் வெளிவரவருக்கிறது. பொதுவாக நிறைய படங்களுக்கு இசையமைப்பதால் கடைசி நேரம் வரை பின்னணி இசை அமைக்கும் வேலையை செய்வார். சில சமயம் அனிருத் பின்னணி இசை அமைக்காமல் பட ரிலீஸ் தள்ளிப்போனதெல்லாம் நடந்திருக்கிறது.
இப்போதும் கூட கூலி படத்தின் பின்னணி இசையை அனிருத் முடித்து கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் சொதப்பிவிட்டால் என்ன செய்வது என யோசித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனிருத்தை அழைத்து ‘ஜுலை மாத இறுதிக்குள் பின்னணி இசையை முடித்து கொடுத்துவிடுங்கள்’ என சொல்லிவிட்டதாம். ஒருபக்கம், விஜய தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்திற்கும் அனிருத்தான் இசை. இந்த படமும் ஆகஸ்டு மாதம் வெளியாகவுள்ளது. அந்த படத்தின் பின்னணி இசையையும் முடித்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அனிருத் இருக்கிறார். எனவே, இதை எப்படி அவர் சமாளிப்பர் என தெரியவில்லை.