தர லோக்கல் ரஜினி!. கூலி படத்தில் தரமான சம்பவம்!.. செம வைப்!.. ஹைப் ஏத்தும் அனிருத்!...

by MURUGAN |
coolie
X

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம்தான் கூலி. வேட்டையன் படத்திற்கு பின் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் இது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லோகேஷும், ரஜினியும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். லோகேஷின் ஸ்டைலில் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக கூலி உருவாகியுள்ளது. லியோ படத்தை இயக்கும் போது ரிலீஸ் தேதி முன்பே அறிவிக்கப்பட்டதால் சரியான நேரம் இல்லாமல் படத்தின் 2ம் பாதியில் சொதப்பினார் லோகேஷ். அந்த படத்தின் கிளைம்கேஸ் யாருக்கும் பிடிக்கவில்லை.

ஆனால், கூலி படத்தில் அவர் நிதானமாக வேலை செய்திருக்கிறார். ஆகஸ்டு 14ம் தேதி ரிலீஸ் என்பதை அவரே முடிவு செய்திருக்கிறார். எனவே, படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என சொல்கிறார்கள். பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படம் ரிலீஸுக்கு முன்பே மாநில மற்றும் வெளிநாட்டு உரிமைகள், ஒடிடி மற்றும் டிவி உரிமைகள் என 500 கோடி லாபத்தை பார்த்துவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அனேகமாக ரஜினிக்கு 1000 கோடி வசூலை தொடும் முதல் படமாக கூலி இருக்கும் என நம்பப்படுகிறது.

இப்படத்தில் இடம் பெற்று சிட்டுக்கு பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை அனிருத்தும், டி.ராஜேந்தரும் இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அனிருத் ‘ஷுட்டிங் போகும் முன்பே பாடலை கேட்கும் பழக்கம் ரஜினி சாருக்கு இல்லை. ஹுக்கும் பாடலை மட்டும் முன்பே கேட்டார்.

கூலி படத்தில் இருக்கும் சிட்டுக்கு பாடலை ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்துதான் கேட்டார். அவருக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துபோனது. இந்த பாடலுக்கு நடனமாடுவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு.ம் ஏனெனில், 80s காலகட்டத்தின் நான் நடனமாடிய ரக்கடு ஸ்டைலில் இந்த பாடலுக்கு ஆட வேண்டும்’ என சொன்னார். பல வருடங்களுக்கு பின் 80 கால கட்டத்தில் வந்த ரஜினியை ரசிகர்கள் இந்த பாடலில் பார்ப்பார்கள்’ என ஹைப் ஏற்றியிருக்கிறார்.

Next Story