கில்லருக்கு பக்காவா ஸ்கெட்ச் போடும் எஸ்.ஜே.சூர்யா... படம் கண்டிப்பா ஹிட்டுதான்!..

by MURUGAN |
sj suriya
X

Killer: அஜித்தை வைத்து வாலி படம் இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. தம்பியின் மனைவி மீது ஆசைப்படும் அண்ணன் என கிளுகிளுப்பான கதை என்றாலும் அதற்கு எஸ்.ஜே.சூர்யா திரைக்கதை அமைத்திருந்த விதம் ரசிகர்களை கவர்ந்தது. எனவே, அப்படம் வெற்றி பெற்றது. அடுத்து விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார்.

இரண்டு குழந்தைகளை காட்டி எதிர்காலத்தில் இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது படத்தின் கதை என படத்தின் துவக்கத்திலேயே சொல்லிவிட்டு படமெடுத்து அதில் வெற்றி பெற்றும் காட்டினார். கல்லூரியில் படிக்கும் இருவருக்கு இடையே இருந்த ஈகோவை காட்டியிருந்தார். அதோடு, கவர்ச்சிக்கு மும்தாஜையும் வைத்திருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

அடுத்து நியூ என்கிற கதையை எழுதி அஜித்திடம் போனார். அஜித்தோ ‘நீங்களே நடியுங்கள்’ என சொல்ல அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவே ஹீரோவாக நடித்தார். அதன்பின் அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை தயாரித்து இயக்கினார். இந்த படங்கள் ஓடவில்லை. எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.


ஒருகட்டத்தில் வில்லன் நடிகராக மாறினார். இது அவருக்கு நன்றாகவே கை கொடுத்தது. மாநாடு படத்தில் வில்லனாக கலக்கி இருந்தார். மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படமும் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படங்களின் வெற்றிக்கு பின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக எஸ்.ஜே.சூர்யா மாறினார்.

எஸ்.ஜே.சூர்யாவை நடிகராக ரசிகர்கள் ரசித்தாலும் அவரை மீண்டும் இயக்குனராக பார்க்க வேண்டும் என்கிற ஆசை ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த கேள்வி அவரிடம் பலமுறை கேட்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கில்லர் என்கிற படம் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில் கில்லர் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். நியூ படத்திற்கு பின் 20 வருடங்கள் கழித்து எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story