அடுத்த அஜித் வந்துட்டாரு!.. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சியான் விக்ரம்.. போட்டோஸ் செம வைரல்!...

Chiyan Vikram: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் விக்ரம். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதுவும் கமலை போல வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்கிற வெறி எப்போதும் விக்ரமுக்கு உண்டு. அதுதான் அவரை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கத்தில் சேது படத்தில் அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி ஸ்கோர் செய்தார். படத்தின் இரண்டாம் பாதியில் விக்ரம் காட்டிய நடிப்பும், அர்ப்பணிப்பும் ரசிகர்களை அழ வைத்தது. அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை பாதித்தது.
அதன்பின் தில், தூள், சாமி என கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். லோக்கலாகவும் நடிப்பார். ரிச் லுக்கில் செம ஸ்டைலாகவும் நடிப்பார். அதுதான் விக்ரமின் பெரிய பிளஸ். காசி போன்ற படங்களில் கண் தெரியாதவராகவும் நடித்திருந்தார். பிதாமகன் படத்தில் விக்ரம் நடித்த வேடத்தை இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்தது இல்லை. அந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார்.

கடந்த சில வருடங்களாக் விக்ரமுக்கு சரியான ஹிட் படம் அமையவில்லை. அவரும் தொடர்ந்து பல படங்களிலும் நடித்துப்பார்த்தார். அவர் சிறப்பாக நடித்தாலும் படம் ஹிட் அடிப்பது இல்லை. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வீர தீர சூரன் படமும் ஓடவில்லை. தற்போது 96 பட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது விக்ரமின் 63வது திரைப்படமாகும். விரைவில் ஷூட்டிங் துவங்கவுள்ளது.

இந்நிலையில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் விக்ரமின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேம் படத்தில் இப்படி ஒரு லுக்கில் வருகிறாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.