கூலி.. கருப்பு.. இட்லி கடை.. அடுத்தடுத்து வரும் தெறி அப்டேட்டுகள்!.. ஹைப் ஏறுதே!...

Coolie karuppu: இந்த ஜுலை மாதம் பல பெரிய நடிகர்களின் முக்கிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரவிருக்கிறது. ஏனெனில், அடுத்தடுத்த மாதங்களின் அவர்கள் நடித்திருக்கும் படங்கள் வெளியாகவுள்ளது. அவைகள் என்னென்னவென பார்ப்போம்.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷும், ரஜினியின் இந்த படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா போன்ற நடிகர்களை நடிக்க வைத்து பல மொழிகளிலும் வெளியிட்டு கல்லா கட்டு திட்டமிட்டிருக்கிறது இப்படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே, இப்படத்தில் இடம் பெற்ற சிக்கடு, மோனிகா ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மோனிகா பாடலுக்கு பல பெண்களும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு டிரெண்டிங் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த பவர் ஹவுஸ் பாடல் வருகிற 22ம் தேதி வெளியாகவுள்ளது. அதேபோல், ஆகஸ்டு 2ம் தேதி டிரெய்லரையும் வெளியிடுகிறார்கள்.
ஒருபக்கம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. இந்த படத்தில் வழக்கறிஞர், கருப்பசாமி என இரண்டு வேடங்களில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வருகிற 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அன்று கருப்பு படத்தின் டீசர் வீடியோவை வெளியிடவுள்ளனர்.

அதேபோல், தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வருகிற அக்டோபர் 1ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் வருகிற 28ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.