அமெரிக்காவிலும் கலக்கும் கூலி!.. பிரீமியர் ஷோ டிக்கெட் சேல்ஸ் என்ன தெரியுமா?

by Murugan |
அமெரிக்காவிலும் கலக்கும் கூலி!.. பிரீமியர் ஷோ டிக்கெட் சேல்ஸ் என்ன தெரியுமா?
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு வியாபாரத்தில் உச்சத்தைதொட்டு வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடு ஆகியவற்றின் ரிலீஸ் உரிமை மற்றும் தொலைக்காட்சி, ஓடிடி ஆகியவற்றின் உரிமை எல்லாம் சேர்த்து 500 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்தது,

தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் எந்த படத்திற்கும் இந்த அளவிற்கு வியாபாரம் நடந்தது இல்லை. விஜய் படத்திற்கு கூட இது நடந்தது இல்லை. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் 650 கோடியாக வசூல் செய்தது, இப்போது கூலியை வைத்து 1200 கோடி வரை வசூலை அள்ளிவிட வேண்டுமென சன் பிக்சர்ஸ் திட்டம் போட்டிருக்கிறது,

அதற்காகவே இந்த படத்தில் நாகர்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா, அமிர்கான் என பல மொழிகளில் இருந்தும் பல நடிகர்களையும் களமிறக்கியுள்ளது. இந்த படம் வருகின்ற ஆகஸ்டு மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளதால் படக்குழு புரமோஷன் வேலைகளை துவங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் பிரீமியர் ஷோவிற்கான டிக்கெட்டுகள் 5 லட்சம் டாலருக்கும் மேல் விற்பனை ஆகியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை எந்த படத்திற்கும் இந்த அளவிற்கு விற்பனை ஆனது இல்லை. கூலி திரைப்படம் முதன்முறையாக வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

Next Story