வெற்றிமாறன் படத்தில் நடிக்கப்போய் இப்படி மாட்டிக்கிட்டாரே!.. லம்ப் அமௌண்ட் போச்சா!..

STR49: திறமையான நடிகராக இருந்தும் தொடர்ச்சியாக படம் நடிக்காத ஒரு நடிகர் எனில் அது சிம்பு மட்டுமே. சின்ன வயதிலிருந்தே சினிமாவில் இருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாவற்றிலும் நல்ல திறமையும் அனுபவமும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் தனுஷ் இப்போது இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டியவர் சிம்புதான்.
ஆனால், சரியான படங்கள் அமையாமல் போனது, நடிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது, சோம்பேறித்தனத்தால் ஷூட்டிங்கிற்கு தாமதமாக போவது என இவருக்கு நிறைய மைனஸ் உண்டு. சிம்புவின் இந்த குணாதிசயங்களாலேயே அவர் நடிப்பில் உருவான பல படங்கள் பிரச்சனைகளை சந்தித்தது. சில படங்கள் தோல்வியும் அடைந்தது.
இதையெல்லாம் புரிந்துகொண்டு சிம்பு தன்னை மாற்றிகொண்டு நடிப்பை சீரியஸாக பார்க்க துவங்கிவிட்டார். கமலுடன் தக் லைப் படத்தில் நடிக்கும்போதே பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என கமிட் ஆனார்.

இதில் ராம்குமார் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு சிம்புவுக்கு சில கோடிகள் முன் பணமும் கொடுக்கப்பட்டது. சிம்பு கேட்டுக்கொண்டதால் ஹீரோவாக நடித்து வந்த சந்தானம் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து நடிக்க சம்மதித்தார். ஆனால், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியதால் படம் உடனே டேக் ஆப் ஆகவில்லை.
எனவே, வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தை கமிட் செய்து நடிக்க துவங்கிவிட்டார் சிம்பு. இது வெற்றிமாறன் ஏற்கனவே தனுஷை வைத்து இயக்கிய வட சென்னை தொடர்பான கதையாகும். இந்நிலையில், சிம்புவுக்கும், சந்தானத்திற்கும் கொடுத்த அட்வான்ஸ் தொகையை டான் பிக்சர்ஸ் நிறுவனம் திருப்பி கேட்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
ஆனால், அந்த செய்தியில் உண்மையில்லை. சிம்பு எப்போது கால்ஷீட் கொடுத்தாலும் நாங்கள் படமெடுக்க தயாராக இருக்கிறோம் என டான் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது. சிம்பு மனசு வைப்பாரா என்பது அவருக்கே வெளிச்சம்!..