4 கோடி செட்!.. விஜய்க்காக விட்டுக் கொடுத்த தனுஷ்!.. நடந்தது இதுதான்!...

Jananayagan: நடிகர் விஜய் இப்போதுள்ள பல நடிகர்களுக்கும் சீனியர். அதேபோல், தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டவர் இவர். இவர் இப்போது 300 கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க ஆள் இருக்கிறது. ஆனால், அவரோ அதை விட்டுவிட்டு அரசியலுக்கு போவதாக அறிவித்திருக்கிறார்.
எனவே, விஜயின் இடத்தை பிடிக்கப்போவது யார் என்கிற போட்டியும் நடிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. கோட் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனின் கையில் கொடுத்துவிட்டு செல்வது போல் காட்சி வைக்கப்பட்டது. எனவே, சிவகார்த்திகேயனே விஜயின் இடத்தை பிடிப்பார் என அப்போது பலரும் பேசினார்கள்.
விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருக்கிறார். அதில் தனது கட்சிக்கு மக்கள் எவ்வளவு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்த பின்னரே அரசியலில் நீடிப்பதா இல்லை சினிமாவில் நடிக்கலாமா என்கிற முடிவை எடுப்பார் என சொல்லப்படுகிறது.

விஜய் மதிக்கும் ஒரு நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார். ஒருமுறை சிறந்த நடிகர் விருது விஜய்க்கு கொடுக்கப்பட்டபோது மேடையில் பேசிய விஜய் ‘என்னை விட சிறந்த நடிகர்கள் இங்கே இருக்கிறார்கள். தனுஷ் இருக்கிறார்’ என ஓப்பனாக பேசினார். அதற்கு டிவிட்டரில் ‘நன்றி அண்ணா’ என பதிவிட்டார் தனுஷ்.
இந்நிலையில், தற்போது ஒரு செய்தி வெளியே கசிந்திருக்கிறது. தனுஷின் புதிய படத்திற்காக 4 கோடி செலவு செய்து ஒரு செட் போட்டிருக்கிறார்கள். ஆனால், ஜனநாயகன் படத்தின் ஒரு பாடல் காட்சியை படமாக்க அந்த செட்டை கேட்டிருக்கிறார்கள். தனுஷ் உடனே அதற்கு ஓகே சொன்னாராம். மற்ற நடிகர்கள் இதை செய்வார்களா என சொல்ல முடியாது. விஜயின் மீதுள்ள அன்பு மற்றும் மரியாதை காரணமாகவே தனுஷ் இதற்கு ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.