ஜேசன் சஞ்சய் இயக்குனரா?!.. சினிமா குலத்தொழில் இல்லை!. பொங்கிய விஜய் பட இயக்குனர்!..

by MURUGAN |
jason
X

அரசியலை போலவே சினிமாவிலும் வாரிசுகள் அதிகமாகவே நுழைவார்கள். பெரும்பாலும் அவர்கள் நடிக்கவே ஆசைப்படுவார்கள். விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஷால், சூர்யா, கார்த்தி, ஜீவா, அதர்வா, துருவ் உள்ளிட்ட பலருமே வாரிசு நடிகர்கள்தான். அதாவது அவர்களின் தந்தைகள் சினிமாவில் தயாரிப்பாளராகவோ, இயக்குனராகவோ, நடிகராகவோ இருந்தவர்கள்.

வாரிசாக இருந்தால் சினிமாவில் சுலபமாக நுழைந்துவிடலாம். ஆனால், சினிமாவில் நீடித்து நிற்க திறமை வேண்டும். சத்யராஜின் மகன் சிபிராஜ், பாக்கிராஜின் மகன் சாந்தனு ஆகியோர் பல வருடங்களாக சினிமாவில் போராடியும் அவர்களுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை.


இந்நிலையில்தான் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவுக்கு வந்திருக்கிறார். சின்ன வயது விஜயை போலவே இருக்கும் ஜேசன் நடிகராக வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். பல இயக்குனர்கள் ஜேசனை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டினார்கள். விஜய் மூலமாகவும் முயற்சி செய்தார்கள். ஆனால், அவரோ நடிப்பில் ஆர்வம் இல்லை. இயக்கம்தான் ஆர்வம் என சொல்லி இப்போது ஒரு படம் இயக்கி வருகிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை இயக்கிய பேரரசு ஒரு சினிமா விழாவில் பேசும்போது ஜேசன் சஞ்சய் பற்றி பேசியிருக்கிறார்.


பொதுவாக இயக்குனரின் மகன், நடிக்க வருவார். அதேபோல், சண்டை பயிற்சி இயக்குனர் மகன், தயாரிப்பாளர் மகன், நடன இயக்குனர் மகன் என எல்லோரின் வாரிசுகளும் சினிமாவில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், விஜயின் மகன் ஜேசன் சஞ்சர் நடிக்க வராமல் இயக்குனராக வந்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அப்பா செய்ததையே மகனும் செய்ய இது ஒன்றும் குலத்தொழில் இல்லை’ என பேசியிருக்கிறார்.

Next Story