கருப்பன் வரான் வழி மறிக்காதே!.. போஸ்டர் தெறி!.. கருப்பு புது அப்டேட் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி!..

by MURUGAN |
karuppu
X

Karuppu: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம்தான் கருப்பு. இந்த படத்தில் வழக்கறிஞர், கருப்ப சாமி என இரண்டு வேடங்களில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன் திரைப்படங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன் படம் முலம் இயக்குனராக மாறினார்.

தற்போது சூர்யாவை வைத்து படம் இயக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். கருப்பு படத்தில் நட்டி நடராஜ், ஷிவதா, யோகி பாபு, ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்த்ரன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.


சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கங்குவா படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்த ரெட்ரோ படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, கருப்பு படம் தனக்கு கை கொடுக்கும் என அவர் காத்திருக்கிறார்.

கருப்பு படத்தை பொறுத்தவரை இதுவரை சில போஸ்டரை மட்டுமே படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், வருகிற 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வீடியோ அல்லது கிளிம்ப்ஸ் வீடியோ என ஏதோ ஒன்றை படக்குழு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது ஆர்.ஜே.பாலாஜியும் அதை உறுதி செய்திருக்கிறார். ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 23.07.25 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. கண்ணாடி அணிந்த ஒரு முகம் வரையப்பட்டு கண்ணாடிக்கு மேல் நெருப்பில் குதிரை ஓடுவது போல டிசைன் செய்திருக்கிறார்கள். மேலும், கண்ணாடியை உற்றுப்பார்த்தால் அதனுள் கருப்ப சாமி கோவில் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


Next Story