இயக்குனர் வேலு பிரபாகரன் மரணம்?!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

by MURUGAN |
velu prabakaran
X

Velu Prabakaran: ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகர், பகுத்தறிவுவாதி, கடவுள் மறுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் வேலு பிரபாகரன். 1980ம் வருடம் முதல் இவர் திரையுலகில் இருக்கிறார். ஒளிப்பதிவாளராக தனது கெரியரை துவங்கினார். பிக்பாக்கெட், உருவம், உத்தம ராசா, மற்றவரை நேரில் உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நாளைய மனிதன், சரியான ஜோடி, அதிசய மனிதன், புதிய ஆட்சி, அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன், காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரின் படங்களில் பகுத்தறிவு சிந்தனைகள் அனல் பறக்கும். கடவுள் மற்றும் மூட நம்பிக்கைக்களுக்கு எதிராக பல காட்சிகளையும், வசனங்களையும் வைத்தவர் இவர். பெரியாரின் தீவிர பக்தர். ஜாங்கோ, ஆண்டி இந்தியன், பீசா 3, ரெய்ட், வெப்பன், கஜானா உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவருக்கு வயது 65.


ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்த வேலு பிரபாகரன் காதல் கதை படத்தில் நடித்த நடிகையை 2வதாக திருமணம் செய்து கொண்டார். ஊடகங்களில் புரட்சிகரமான விஷயங்களை பேசியவர். கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவர் மரணமடைந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால், எந்த செய்தி தொலைக்காட்சியிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story