300 கோடி கொடுப்பது அவரா?!.. அஜித் படத்தை தயாரிக்க பணம் கொடுப்பது யார் தெரியுமா?!...

Ajithkumar: அஜித்தின் விடாமுயற்சி படமும், குட் பேட் அக்லி படமும் அடுத்தடுத்து வெளியானது. இந்த இரண்டு படங்களிலும் நடித்து கொடுத்துவிட்டு கார் ரேஸுக்கு போனார் அஜித். துபாயில் உள்ள கார் ரேஸை முடித்துவிட்டு இப்போது ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வருகிறார்.
விடாமுயற்சி படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஏனெனில், அஜித்தின் ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் காட்சிகள் அந்த படத்தில் இடம் பெறவில்லை. ஆனால், அடுத்து வந்த குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களை முழுக்கவே திருப்திப்படுத்தியது. ஏனெனில், அவர்கள் அஜித்திடம் எதிர்பார்த்த மாஸ் காட்சிகள் எல்லாமே அந்த படத்தில் இருந்தது.
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார் என்கிற செய்தி வெளியானது. ஆனால், குட் பேட் அக்லி உருவாகும்போது தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இந்த படத்தை அவர்கள் தயாரிக்கவில்லை என சொன்னார்கள்.

அதையும் மீறி முயற்சிகள் செய்தபோது அஜித் கேட்ட 180 கோடி சம்பளத்தை கொடுக்க முடியாது என அந்நிறுவனம் கைவிரித்துவிட்டது. ஏனெனில் படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடியை எட்டுகிறது. அதன்பின் சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முயற்சி செய்தும் யாரும் முன்வரவில்லை.
அப்போதுதான் பிரபல வினியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்கப்போகிறார் என செய்தி வெளியானது. குட் பேட் அக்லி படத்தை கூட இவர்தான் தமிழகத்தில் வெளியிட்டார். இவர் சின்ன தயாரிப்பாளர்தான். இவர் எப்படி 300 கோடி பட்ஜெட்டில் அஜித் படத்தை தயாரிக்கப்போகிறார் என்கிற கேள்வி திரையுலகில் எழுந்திருக்கிறது.
இந்நிலையில்தான் இது தொடர்பான செய்தி வெளியே கசிந்திருக்கிறது. ராகுல் ரெட்ஜெயண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறார். அஜித்தை வைத்து போனி கபூர் 3 படங்களை தயாரித்த போது அந்த படங்களிலும் வேலை செய்திருக்கிறார். அந்த 3 படங்களுக்கும் மும்பையை சேர்ந்த ஒரு ஃபைனான்சியர்தான் பணம் கொடுத்திருக்கிறார். அவர்தான் இப்போது ஆதிக் இயக்கும் படத்திற்கு ஃபைனான்ஸ் செய்ய வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.