அட்வான்ஸா வேலை பார்த்த ஹெச்.வினோத்!. விஜய்க்காகத்தான் வெயிட்டிங்!. ஜனநாயகன் அப்டேட்!...

Janayayagan: கோட் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தோடு தான் சினிமாவை விட்டு விலகுவதாகவும், முழு அரசியலில் அவர் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். எனவே, இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
துவக்கத்தில் இந்த படம் தெலுங்கில் பாலையா நடித்து வெளியாகி ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்பட்டது. அந்த படத்தில் ஸ்ரீலீலா வேடத்தில் தமிழில் மம்தா பைஜூ நடிப்பதாகவும், தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த வேடத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. அதோடு, ஜனநாயகனில் வில்லனாக பாபி தியோல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பூஜையும் நடந்தது.
ஆனால், விஜய் தொண்டர்களுடன் செல்பி எடுப்பது போல போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குழப்பியது. விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அரசியல் தொடர்பான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் எனவும் கருதப்பட்டது. ஆனால், விஜய் போலீஸ் வேடத்தில் இருப்பது போல ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வெளியாகி வைரலானது.
மேலும், இந்த படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை. அந்த படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு காட்சி மட்டுமே ஜனநாயகன் படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும், அதற்காகவே படத்தின் ரீமேக் உரிமையை ஜனநாயகன் படக்குழு வாங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.
ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. இதற்கிடையில் படத்தை எடுத்த வரைக்கும் முழுமையாக எடிட் செய்து வைத்துவிட்டாராம். விஜய் அதை பார்த்துவிட்டு ஓகே சொன்னால் போதும் என்பதுதான் புதிய அப்டேட்டாக இருக்கிறது.
டம்மி பின்னணி இசையில் படம் பார்த்தபோது வினோத்திற்கு முழு திருப்தி என்கிறார்கள். விஜய் ஓகே சொன்ன பின் அவர் மாற்றம் சொன்னால் செய்துவிட்டு படத்தின் மற்ற வேலைகளை செய்வார்கள் என சொல்லப்படுகிறது.