வசதியான ஒருத்தர வளைச்சி போட்டாரே!... ரவி மோகன் தயாரிப்பாளர் ஆனதன் பின்னணி!...

by MURUGAN |
ravi mohan
X

Ravi Mohan: ஜெயம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. துவக்கத்தில் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் தெலுங்கு ரீமேக் படங்களில் நடித்து வந்த ரவி ஒரு கட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்தார். நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் ரவியின் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது.

ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்தார். இந்த விவகாரம் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது. ஆர்த்தியின் மீதும், அவரின் அம்மாவின் மீது ரவி அடுக்கடுக்கான புகார்களை சொன்னார்.

ஆனால், அதையெல்லாம் ஆர்த்தி மறுத்தார். ஒருபக்கம், கோவாவை சேர்ந்த பாடகி கென்னிஷா என்பவரோடு ரவிக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ரவி அதை மறுத்தார். ஆனால், தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் இல்ல திருமண விழாவுக்கு கென்னிஷாவுடன் ஜோடி போட்டு வந்தார் ரவி.


அதோடு, மும்பையில் தனியாக அலுவலகமும் துவங்கினார். மேலும், தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். ரவி மோகன் புரடெக்‌ஷன் என்கிற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார். அதில் குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களை தாயரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ரவி மோகன் சினிமாவுக்கு வந்து 23 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது என்ன திடீரென தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் குடும்பத்தில் இவ்வளவு சிக்கல் இருக்கும்போது இதையெல்லாம் எப்படி சமாளிக்கப்போகிறார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் வசதியான ஒருவர்தான் ரவி மோகன் தயாரிக்கும் படங்களுக்கு பணம் கொடுக்கப்போகிறாராம். அந்த நம்பிக்கையில்தான் ரவி தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Next Story