விஜய் அரசியலுக்கு போனதால் ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்!.. மொத்த பிஸ்னஸும் குளோஸ்!..

by MURUGAN |
விஜய் அரசியலுக்கு போனதால் ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்!.. மொத்த பிஸ்னஸும் குளோஸ்!..
X

Jananayagan: அதிக ரசிகர் கூட்டங்களை கொண்ட நடிகர்களில் விஜய் முக்கியமானவர். 80,90களில் ரஜினிக்கு எப்படி ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருந்ததோ அப்படி ஒரு ரசிகர் கூட்டம் இப்போது விஜய்க்கு இருக்கிறது. கடந்த 20 வருடங்களாகவே முன்னணி நடிகர் என்கிற இடத்தில் விஜய் இருக்கிறார்.

துவக்கத்தில் இவரின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் எடுபடவில்லை என்றாலும் பூவே உனக்காக படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்தார். துள்ளாத மனமும் துள்ளும், கில்லி, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இவரை முக்கிய நடிகராக மாற்றியது.


ஒருகட்டத்தில் கோலிவுட்டின் அசைக்க முடியாத நடிகராக விஜய் மாறிப்போனார். ரஜினியையே ஓவர்டேக் செய்து அதிக சம்பளம் வாங்கினார். அதோடு, ரஜினி படங்களை விட விஜயின் படங்கள் அதிக வசூலையும் பெற்று வருகிறது. விஜயின் சம்பளம் இப்போது 250 கோடியை தொட்டுவிட்டது.

ஆனால், சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போவதாக விஜய் அறிவித்திருக்கிறார். இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் விஜயை இனிமேல் படங்களில் பார்க்க முடியாது என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், விஜயோ இனிமேல் அரசியல்தான் என்பதில் தீவிரமாக இருக்கிறார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருக்கிறது.


சினிமாவையும், அரசியலையும் பிரிக்கவே முடியாது. இங்கு எல்லாவற்றிலும் அரசியல் நுழையும். அதனால்தான் சினிமாவில் இருந்துகொண்டே அரசியல் செய்தால் அது சினிமாவை பாதிக்கும் என்பது புரிந்து விஜய் சினிமாவில் நடிக்கமாட்டேன் என சொல்லியிருக்கிறார். ஆனாலும், அவரின் கடைசிப்படமான ஜனநாயகன் வியாபாரத்திலும் அரசியல் புகுந்திருக்கிறது.

குறிப்பாக ஆளும் கட்சியை எதிர்த்து விஜய் அரசியல் செய்து வருவதால் அது ஜனநாயகன் பட ரிலீஸிலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனநாயகன் படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் இருக்கிறது. எனவே, ஆளும் கட்சியை பகைத்துகொண்டு இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்குகிறார்களாம். பல பெரிய நிறுவனங்களே இதிலிருந்து பின் வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, படத்தை வெளியிடும் உரிமை தனது உறவினர் மற்றும் தன்னை வைத்து மாஸ்டர், லியோ போன்ற படங்களை இயக்கிய லலித்குமாரிடம் கொடுக்க விஜய் முடிவு செய்திருக்கிறாராம்.

Next Story