தக் லைப் தமிழ் சினிமாவை புரட்டிப்போடும்!.. விண்வெளி நாயகன் என்ன சொல்றார் பாருங்க!...

by MURUGAN |
kamal, thuglife.
X

Thug life: நாயகன் படத்திற்கு பின் கமலும், மணிரத்னமும் தக் லைப் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். அதோடு, முதன் முறையாக இப்படத்தில் மணிரத்னமும், சிம்புவும் இணைந்திருக்கிறார்கள். இதுவே சிம்பு ரசிகர்களிடம் ஹைப்பை ஏற்றியிருக்கிறது. அதோடு, திரிஷா, அபிராமி, நாசர் போன்றவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்க விருக்கிறார்கள்.

இந்த படத்தின் புரமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் கலந்துகொள்ள அவரைப்பற்றி பேசும்போது ‘தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானது’ என கமல் சொன்ன சில கன்னட அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகும் என போர்க்கொடி தூக்கின.

ஆனால், கமலோ நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. எனவே, மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி நீதிமன்றத்தை நாடினார். ஆனால், நீதிபதியும் அதே கருத்தை தெரிவிக்க கமல் தரப்பில் மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லியதோடு, தக் லைப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது. ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என சொல்லப்பட்டது. ஒருபக்கம் கமலுக்கு ஆதரவும் பெருகி வருகிறது.


நாளை படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கமல், சிம்பு, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய கமல் ‘ மணிரத்னம் ஒரு சினிமா ஞானி. அவருடன் பணிபுரிவது எனக்கு குதூகலமாக இருந்தது. சர்வதேச தரத்தில் தக் லைப் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவை புரட்டிப்போட நினைக்கிறேன். உறுதுணையாக இருக்கும் தமிழ்நாட்டுக்கு நன்றி. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இன்னும் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. கண்டிப்பாக அதற்கு தமிழனாக நேரம் ஒதுக்கி தர வேண்டியது எனது கடமை. நான் மேடையில் பேசும்போது உயிரே, உறவே, தமிழே என சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்’ என பேசியிருக்கிறார்.

அதேபோல், அந்த விழாவில் பேசிய ‘தக் லைப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் மணி சார் சிறப்பாக இயக்கி இருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும். கமல் சார் பின்னி பெடலெடுத்திருக்கிறார்’ என பேசியிருந்தார். இதுதான் தக் லைப் படம் தொடர்பான கடைசி புரமோஷன் நிகழ்ச்சி. நாளை காலை 9 மணிக்கு இப்படம் ரிலீஸாகவுள்ளது.

Next Story