1000 கோடி கன்பார்ம்!. காந்தாரா ஷூட்டிங் ஓவர்!.. கிளிம்ப்ஸ் வீடியோ பாருங்க!...

by MURUGAN |
kantara
X

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து 2022ம் வருடம் வெளியான திரைப்படம்தான் காந்தாரா. இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கன்னட படமான கேஜிப் இங்கு வரவேற்பை பெற்றதால் காந்தாரா படமும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி தமிழ்நாட்டிலும் வசூலை அள்ளியது.

இந்த படத்தை பார்த்த நடிகர் தனுஷ் ரிஷப் ஷெட்டியை போனில் அழைத்து பாராட்டினார். படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த ரிஷப் ஷெட்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றி கூறினார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக் சப்தமி கவுடா நடித்திருந்தார். மேலும், கிஷோர், அச்யூத் குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கர்நாடகாவில் மலைப்பகுதியில் வாழும் பூர்வகுடி மக்கள் கடவுளாக வணங்கும் காந்தாரா பற்றிய கதை இது.


இந்த படம் ஹிட் அடிக்கவே, இப்போது நீங்கள் பார்த்தது இரண்டாம் பாகம். இப்படத்தின் முதல் பாகத்தை எடுக்கிறேன் என களமிறங்கினார் ரிஷப் ஷெட்டி. காந்தாராவை விட காந்தாரா சேப்டர் ஒன் 125 கோடி செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 3 வருடங்களாக இப்பட வேலைகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் முடிவுந்துவிட்டது.

இந்த அறிவிப்போ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவைவும் படக்குழு பகிர்ந்துள்ளது. இது வெறும் சினிமா அல்ல. எங்கள் மக்களின் வாழ்க்கை, நம்பிக்கை. கடந்த 3 வருடங்கள். 250 நாட்கள் படப்பிடிப்பு.. என்னுடன் 1000 பேர் நின்றார்கள்’ என கிளிம்ப்ஸ் வீடியோவில் ரிஷப் ஷெட்டி உருக்கமாக பேசியிருக்கிறார். வருகிற அக்டோபர் 2ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.




Next Story