இந்தா வந்துட்டாங்கல்ல!... கருப்பு பட போஸ்டருக்கு எதிர்ப்பு!.. சமாளிப்பார சூர்யா?!...

by MURUGAN |
karuppu
X

Karuppu poster: சினிமாவில் நடிகர்கள் புகை பிடிப்பது போல காட்சிகள் வருவது மிகவும் சாதாரண ஒன்று. கருப்பு வெள்ளை காலத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி நிறைய படங்களில் சிகரெட் பிடிப்பது போல காட்சிகளில் நடித்திருக்கிறார். அப்போது சிவாஜி, ஜெமினி, நாகேஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அதேநேரம், அவையெல்லாம் போஸ்டர்களில் இருக்காது.

80களில் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய ரஜினிகாந்த் தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து ஸ்டைலாக விதவிதமாக சிகரெட் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுவும் அவர் சிகரெட்டை பற்ற வைக்கும் ஸ்டைலே தனி. குறிப்பாக சிகரெட்டை வாயில் வைக்காமல் துக்கிப் போட்டு வாயில் கச்சிதமாக பிடிக்கும் அவரின் ஸ்டைல் 70 மற்றும் 80 கிட்ஸ்களிடம் மிகவும் பிரபலம்.

அதேநேரம், சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்து ஒரு தலைமுறையே ரஜினி கெடுத்துவிட்டார் என பாமக போன்ற கட்சிகள் புகார் சொன்னது. எனவே, பாபா படத்திற்கு பின் ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை விட்டுவிட்டார். அதேநேரம், விஜய் தொடர்ந்து தனது படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்துகொண்டுதான் இருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் அப்படி காட்சிகள் இடம் பெற்றிருந்தது.


இந்நிலையில்தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள கருப்பு பட போஸ்டரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்த படத்தின் ஒரு போஸ்டர் சூர்யா வாயில் சுருட்டு பிடித்துக்கொண்டே நடந்து வருவது போல உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்த பல சமூக ஆர்வலர்கள் ‘சூர்யா தொடர்ந்து புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகிறார். விரைவில் நீங்கள் சினிமா உலகிருந்து விரட்டி அடிக்கப்படுவீர்கள். இளைஞர்களும், மாணவர்களும் இவரை பின்பற்றக் கூடாது’ என அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாக ராஜேஸ்வரி பிரியா என்பவர் பதிவிட்டிருக்கிறார்.


ஏற்கனவே ஜெய்பீம் படம் வந்தபோது பாமக அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால், வன்னியர்களின் கோபத்திற்கும் சூர்யா ஆளானார். தற்போது கருப்பு பட விவகாரத்தை அவர்கள் கையில் எடுப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு படம் கருப்பசாமி பற்றிய கதை. கருப்பசாமி என்றால் வாயில் சுருட்டு வைத்திருப்பார் என்பதற்காக சூர்யாவை அப்படி காட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story