சூர்யாவுக்கு No.. விஜய்க்கு Yes.!...செம சீன் போடும் கீர்த்தி சுரேஷ்!.. எல்லாம் நேரம்தான்!..

Keerthi suresh: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா மேனகா 80களில் சினிமாவில் நடித்தவர் என்பதால் சிறுவயது முதலே தானும் நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார் கீர்த்தி. இது என்ன மாயம் என்கிற படம் மூலம் நடிக்க துவங்கிய கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.
தமிழில் நடிக்க துவங்கியபோதே அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் போனார். ஒரு கட்டத்தில் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறினார். தமிழை விட இவருக்கு தெலுங்கில் நல்ல வேடங்கள் கிடைத்தது. சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார்.
பெண்குயின், சாணி காயிதம், மகாநதி, ரகுதாதா என தொடர்ந்து அப்படி நடித்தார். இதில் மகாநதி படம் அவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது. விஜயுடன் பைரவா, மெர்சல் போன்ற படங்களில் நடித்தார். ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்தார். கீர்த்தி சுரேஷ் தமிழில் ஹிட் படம் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
தெறி ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டுக்கும் போனார். ஆனால், இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. இந்த படத்தை தயாரித்த அட்லிக்கு நஷ்டமும் ஏற்பட்டது. போன வருடம் தனது பல வருட நண்பர் அந்தோணி என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.
வாய்ப்பே இல்லாமல் இருந்தவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வாய்ப்புகள் வந்திருக்கிறது. லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லுரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை கேட்டிருக்கிறார்கள். ஆனால், விஜய தேவர கொண்டாவின் புதிய படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதால் சூர்யா படத்தில் நடிக்க முடியாது என கைவிரித்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்.
மணிரத்னம் பொன்னியின் செல்வன் எடுத்த போது அந்த படத்தில் நடிக்க கீர்த்தியை கேட்டார்கள். ஆனால், ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிப்பதை காரணம் காட்டி நடிக்க மறுத்தார். ஆனால், பொன்னியின் செல்வன் சூப்பர் ஹிட் அடித்து பல கோடிகள் வசூல் செய்தது. ஆனால், அண்ணாத்த படம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.