ரிலீசுக்கு முன்பு கோடிகளை அள்ளிய குபேரா!.. பட்ஜெட்ல பாதிய எடுத்தாட்டாங்களே!...

Kubera: தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள திரைப்படம்தான் குபேரா. இந்த படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். இந்த படம் ஒரு சோஷியல் திரில்லராக உருவாகியிருக்கிறது.
தனுஷ் இதுவரை எந்த படத்திலும் பிச்சைக்காரராக நடித்தது இல்லை என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மும்பையில் நடப்பது போல படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அதோடு படக்குழுவும் பல இடங்களுக்கும் சென்று புரமோஷன் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக தனுஷ், நாகார்ஜுனா போன்றோர் பேசிய வீடியோக்கள் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுவும், தனுஷ் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மிகவும் கடுமையாகவே எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.
குபேரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நாளை வெளியாகவுள்ளது. தனுஷுக்கு இப்படம் வெற்றிப்படமாக அமையுமா என்கிற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவுகிறது. இந்நிலையில், படத்திற்கு முந்தைய வியாபாரத்தில் இப்படம் பல கோடிகளை அள்ளியிருக்கிறது.
தெலுங்கு தியேட்டர் உரிமை 33 கோடிக்கும், தமிழ்நாடு உரிமை 18 கோடிக்கும், கர்நாடகா 5.50 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 8.50 கோடிக்கும் என உலக அளவில் இப்படம் 65 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. 120 கோடி வியாபாரம் ஆனால் மட்டுமே படம் பட்ஜெட்டை பெற்றுவிடும் என்கிற நிலையில் அதில் பாதியை தியேட்டர் உரிமை பெற்றிருக்கிறது.
இதுபோக ஓடிடி, டிவி போன்ற உரிமைகளும் கணிசமான கோடிகளுக்கு விற்பனை செய்யப்படும். இதையெல்லாம் பார்த்தால் பட்ஜெட்டில் 75 சதவிகிதம் இதிலேயே வந்துவிடும் என கணிக்கப்படுகிறது. இது எல்லாம் போக தியேட்டர்களில் கிடைக்கும் வருமானம் இருக்கிறது. படம் மட்டும் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் தயாரிப்பாளருக்கு குபேரா நல்ல லாபத்தை கொடுக்கும் என்றே கணிக்கப்படுகிறது. குபேரா படத்தின் பட்ஜெட் 120 கோடி என சொல்லப்படுகிறது.