கமலுக்கு ’ஆரம்பிக்கலாங்களா’.. கூலி ரஜினிக்கு அந்த வசனம்.. ஹைப் ஏத்தும் லோகேஷ்..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி முக்கிய வேடத்தில் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்தியராஜ். ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
லியோ படத்திற்கு பின் லோகேஷ் இயக்கியுள்ள திரைப்படம் இது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிர்கான் கேமியோ வேடத்தில் நடித்திருப்பது எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷும் ரஜினியும் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூலிப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் பேன் இந்தியா படமாக பல மொழிகளிலும் ரிலீசாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதால் படக்குழு புரமோஷனில் இறங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படம் பற்றிய பல தகவல்களை பல ஊடகங்களிடம் சொல்லி வருகிறார். கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் படம் துவங்கியபோது படம் தொடர்பாக முதலில் வெளியான புரமோஷன் வீடியோவில் கமல் ‘ஆரம்பிக்கலாங்களா’ என வசனம் பேசுவார். அதேபோல் கூலி படத்தில் ரஜினி ஏதாவது வசனம் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இதுபற்றி பதிலளித்த லோகேஷ் கனகராஜ் ‘இந்த படத்தில் ரஜினி சாருக்கு ‘முடிச்சுரலாமா’ என்கிற வசனத்தை யோசித்தோம். அந்த வசனம் இடைவேளையில் பீக்கான நேரத்தில் வருகிறது. இந்த வசனம் வரும் இடம் கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்’ என அவர் தெரிவித்தார்.