மன்னிப்பு கேட்க முடியாது!. கமலுக்கு பெருகும் ஆதரவு!.. தக் லைஃப் ரிலீஸ் ஆகுமா?!..

Thuglife: தக் லைப் பட புரமோஷன் விழாவில் கலந்துகொண்ட கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் பற்றி கமல் பேசியபோது ‘தமிழ் மொழியில் இருந்து உருவான மொழிதான் கன்னடம்’ என கூறியதை கையில் எடுத்த சில கன்னட அமைப்புகள் ‘கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் தக் லைப் திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது’ என மிரட்டினார்கள்.
ஆனால் ‘நான் சொன்னது அன்பின் வெளிப்பாடுதான். இதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?’ என கமல் கறார் காட்ட இதை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயன்ற கன்னட அமைப்புகள் கோபமடைந்தன. கர்நாடக முதல்வரும் கமல் கூறியது தவறு என்பது போல கருத்துக்கூறியிருந்தார்.
ஜூன் 5ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் கமல் மன்னிப்பு கேட்காததால் கர்நாடகாவில் தக் லை படம் வெளியாகுமா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஒருபக்கம், கமல் கர்நாடக நீதிமன்றத்தை நாடினார். ஆனால், நீதிபதியும் கன்னட அமைப்புகளின் கருத்துக்களையே பிரதிபலித்து ‘கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என சொல்ல இந்த விஷயம் சூடு பிடித்தது.
எனவே, கர்நாடக சினிமா வர்த்தக சபைக்கு கமல் கடிதம் எழுதினார். அதில், தான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் பேசினேன், கன்னட மொழியின் பாரம்பரியத்தின் மீது எனக்கு மரியாதை உண்டு’ என குறிப்பிட்டிருந்தார். ஆனால், ‘இதில் மன்னிப்பு என்கிற வார்த்தையே இல்லை.. கமலுக்கு எனன் ஈகோ?; என நீதிமன்றம் கோபம் காட்டியது.
செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க முடியாது. கர்நாடகாவில் தக் லைப் பட ரிலீஸை ஒரு வாரம் தள்ளி வைக்கிறோம் என கமல் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அரசியல் அமைப்புகளும், அரசியல்வாதிகளும் கமலுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். கமல் சொன்னது சரிதான். அவர் மன்னிப்பு கேட்கக்கூடாது என சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், தக் லைப் படத்தை கர்நாடகாவில் அனுமதிக்கவில்லை எனில் கன்னட நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகன் படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் அறிவித்திருக்கிறார். மேலும், சீமான், கருணாஸ் போன்றவர்களும் கமலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், நெட்டிசன்களும் கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் WeStandWithKamalhaaasan என்கிற ஹேஷ்டேக்கையும் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். மொத்தத்தில் தக் லைப் விவகாரம் தமிழ் மற்றும் கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையில் தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட விரும்புகிறோம். பிரச்சனையை பேசி ஒரு சுமூக முடிவு எடுப்போம் என கர்நாடக வர்த்தகசபை அறிவித்திருக்கிறது.