ஓடி ஓடி பத்திரிக்கை வச்சும் ஒருத்தரும் போகலயே!.. கிங்காங் மகள் திருமணத்தில் நடந்த சோகம்!...

by MURUGAN |   ( Updated:2025-07-10 07:56:08  )
king kong
X

Actor Kingkong: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் கிங்காங். இவரின் நிஜப்பெயர் சங்கர். நட்பு வட்டாரங்கள் இவரை சங்கரா என அழைப்பார்கள். 1988ம் வருடம் வெளிவந்த ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். உயரம் குறைவாக இருக்கும் இவர் காமெடி வேடங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்தார்.

நன்றாக நடனமும் ஆடுவார். குறிப்பாக டேன்ஸ் மிமிக்ரி என சொல்லப்படும் நடிகர்களை போல நடனமாடுவதில் இவர் கில்லாடி. சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளுக்கும் சென்று இது போல நடனமாடி வருகிறார். வடிவேலுவுடன் இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.


குறிப்பாக ஒரு படத்தில் ‘எனக்கு நாளைக்கு கல்யாணம்’ என அவர் சொன்னதும் அதிர்ச்சியில் வடிவேலு வாயில் இருந்த டீயை கீழே துப்புவார். இதை மீம்ஸ் மெட்டியரிலாக இப்போதும் ஃபேஸ்புக்கில் பார்க்கலாம். அதேபோல், கந்தசாமி, போக்கிரி உள்ளிட்ட பல படங்களிலும் கிங்காங் காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார்.

இவரின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அது தொடர்பான பத்திரிக்கையை சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலருக்கும் நேரில் சென்று கொடுத்தார். கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், யோகி பாபு, லதா ரஜினிகாந்த், சார்லி, உதயநிதி, தேவயாணி, ஐசரி கணேஷ், கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் என பலருக்கும் நேரில் போய் பத்திரிக்கை வைத்தார்.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் அவரின் மகள் திருமணம் நடந்தது. ஆனால், அதில் அவர் பத்திரிக்கை வைத்த யாரும் கலந்துகொள்ளவில்லை. திருமண தொடர்பான வீடியோவை சிலர் பகிர்ந்து ‘சினிமா நடிகர்கள் யாரும் திருமணத்தில் கலந்துகொள்ளவிலை’ என பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனால், திருமணம் கோவிலில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இன்று மாலை நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது.


Next Story