நைட்டு நிம்மதியா தூங்கினேன்!.. கூலி பார்த்துட்டு ரஜினி அடித்த கமெண்ட்டில் ஹேப்பியான லோகேஷ்!..

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில், லோகேஷ் கனகராஜ் பக்கா கேங்ஸ்டர் ஆக்சன் படமெடுப்பவர். ரஜினி பக்கா மாஸாக நடிப்பவர். இவர்கள் இருவரும் இணைந்தால் திரையில் அதகளம்தான். கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
விஜயை வைத்து மாஸ்டர், லியோ என இரண்டு படங்களை இயக்கினார் லோகேஷ். எனவே விஜய் ரசிகர்களுக்கும் பிடித்த இயக்குனராக மாறிவிட்டார். விஜயை வைத்து படமெடுப்பவர்களை கூப்பிட்டு அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அப்படித்தான் பீஸ்ட் படமெடுத்த நெல்சனை அழைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார்.

கூலி படமும் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதோடு, பாலிவுட் நடிகர் அமீர்கானும் அசத்தலான கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
கடந்த 2 வருடங்களை கூலிக்காகவே அர்ப்பணித்துவிட்டேன். குடும்பம், உறவினர் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளுக்கும் கூட போகவில்லை. என்னுடைய 36 மற்றும் 37 வயது கூலிக்காகவே போய்விட்டது என லோகேஷ் ஊடகம் ஒன்றில் சொல்லியிருந்தார். மேலும் 2 நாட்கள் குளிக்காமல், தூங்காமல், சரியாக சாப்பிடாமல் கூட லோகேஷ் வேலை பார்த்தார் என கூலி படத்தில் வேலை செய்தவர்கள் சொன்னார்கள்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் ‘ரஜினி சார் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் தளபதி. அந்த உணர்வை கூலி படத்தில் கொண்டு வர ஆசைப்பட்டேன். இந்த படத்தின் டப்பிங்கின் போது காட்சிகளை பார்த்த ரஜினி சார் ‘என்னை கட்டியணைத்து ‘எனக்கு தளபதி போல இந்த படம் இருக்கு’ என சொன்னார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. அன்று இரவு நன்றாக தூங்கினேன்’ என சொல்லியிருக்கிறார்.