விஜயை விட அதிக சம்பளம்!.. கலாநிதி மாறனுக்கு ஷாக் கொடுத்த ரஜினி.. ஜெயிலர் 2 அப்டேட்...

Rajinikanth: இப்போதெல்லாம் நடிகர்களிடையே ‘யார் அதிக சம்பளம் வாங்குவது?’ என்கிற போட்டிதான் காணப்படுகிறது. இத்தனைக்கும் தங்களின் கடைசி சில படங்கள் எவ்வளவு வசூல் செய்தது?. அதன் மூலம் தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம்? என்பதை கூட அவர்கள் பார்ப்பது இல்லை. ஒரு ஹிட் கொடுத்துவிட்டால் சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள். சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை இதைத்தான் செய்கிறார்கள்.
40 கோடி சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் அமரன் ஹிட்டுக்கு பின் தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்திவிட்டார். 8 கோடி வாங்கிக்கொண்டு மாநாடு படத்தில் நடித்த சிம்பு அந்த படத்தின் வெற்றிக்கு பின் 30 கோடி கேட்கிறார். 30 கோடி வாங்கி வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம், ராயன் ஹிட்டுகளுக்கு பின் 50 கோடி கேட்கிறார். இவர்களே இப்படியென்றால் ரஜினி சும்மா இருப்பாரா?...
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்த அண்ணாத்த படத்தில் 120 கோடி சம்பளம் வாங்கினார் ரஜினி. ஆனால், அந்த படமோ நஷ்டம். எனவே, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்தார் ரஜினி. அண்ணாத்த நஷ்டத்தை காட்டி சன் பிக்சர்ஸ் 80 கோடி சம்பளம் என சொன்னது. ரஜினியும் ஏற்றுக்கொண்டு ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்க 30 கோடியை ரஜினிக்கு அன்பளிப்பாக கொடுத்தார் கலாநிதிமாறன்.
வேட்டையன் படத்தில் நடிக்க லைக்கா நிறுவனத்திடம் 125 கோடி சம்பளம் பேசினார் ரஜினி. அந்த படமோ லைக்காவுக்கு நஷ்டத்தை கொடுத்தது. ரஜினி இப்போதெல்லாம் விஜயையே தனது போட்டி நடிகராக பார்க்கிறார். ஏனெனில், தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கி வந்தது ரஜினி மட்டுமே. ஆனால், ஒரு கட்டத்தில் அவரை ஓவர்டேக் செய்து மேலே போனார் விஜய். இதை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சொல்கிறார்கள்.
அதனால்தான் ஜெயிலர் விழாவில் காக்கா, கழுகு கதையெல்லாம் ரஜினி சொன்னார். நான் விஜயை சொல்லவில்லை என ரஜினியே சொன்னாலும் யாரும் அதை நம்பவில்லை. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தில் நடிக்க ரஜினி 150 கோடி சம்பளம் வாங்கினார் என்கிறார்கள். அடுத்தும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் துவங்கியபோது வெறும் 25 கோடியை அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு நடிக்க துவங்கினார் ரஜினி. சம்பளம் பிறகு பேசிக்கொள்ளலாம் என சொல்லிவிட்டார்.
இப்போது அவர் 250 கோடியை சம்பளமாக கேட்கிறாராம். அதற்கு காரணம் ஜெயிலர் படம் 500 கோடி வசூலை தாண்டியது. படம் வெளியாவதற்கு முன்பே கூலி படம் 500 கோடியை லாபம் பார்த்திருக்கிறது. அதோடு, ஜனநாயகன் படத்தில் நடிக்க விஜய் 225 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். எனவே, அவரை விட அதிகம் வாங்க வேண்டும் என யோசித்த ரஜினி ‘250 கோடி கொடுங்கள்’ என கேட்க கலாநிதி மாறன் அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம்.