மூனு மாசம் வேஸ்ட்!. ரெண்டு படமும் எனக்கு வேணாம்!. கடுப்பில் வெளியேறிய ரவி மோகன்!...

Ravi Mohan: ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. அந்த படம் ஹிட் அடிக்கவே அவரின் பெயருக்கு முன்னால் ஜெயம் சேர்ந்துகொண்டது. துவக்கத்தில் அண்ணன் ராஜா இயக்கத்தில் தெலுங்கு படங்களை ரீமேக் செய்து நடித்து வந்த ரவி ஒரு கட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார்.
ரவியின் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கிறது. எனவே, தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வருகிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரவி நடித்த கோமாளி படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதேபோல், அண்ணன் ராஜா இயக்கத்தில் நடித்த தனி ஒருவன் படமும் பேசப்பட்டது. இந்த படம் தெலுங்கில் கூட ரீமேக் செய்யப்பட்டது.
மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் ரவி நடித்திருந்தார். 2 பாகங்களாக வெளிவந்த இந்த படமும் நல்ல வசூலை பெற்றது. ஆர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்களும் இருக்கிறார்கள். ஆனால், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக ஆர்த்தியும் ரவியும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டார்கள். இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. ஒருபக்கம், கோவாவை சேர்ந்த பாடகி கென்னிஷா என்பவரோடும் ரவிக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுபற்றி ரவி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஒருபக்கம், மும்பையில் அலுவலகம் துவங்கியுள்ள ரவி புதிய படங்களை புக் செய்து வருகிறார்.

டிமாண்டி காலனி 2, ரெட்ட தல, சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் போன்ற படங்களை தயாரித்த பி.டி.ஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிப்பதாக ரவி ஒப்பந்தம் போட்டார். ஆனால், 3 மாதங்கள் ஆகியும் கதை மற்றும் இயக்குனரை தேர்வு செய்யாமல் கால்ஷீட்டை வீணடித்ததால் கடுப்பான ரவி வெளியேறிவிட்டாராம்.