கெனிஷாவுக்கு பல கோடியில் வீடு!.. வாங்குற சம்பளத்தை அங்க போய் கொட்டும் ரவி மோகன்!....

Ravi Mohan: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஏனெனில், ரவி மோகனை பற்றி இதுவரை எந்த கிசுகிசுவும் வெளியானது இல்லை. எந்த நடிகையோடும் அவரை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது இல்லை.
நான் படப்பிடிப்புக்கு எங்கு போனாலும் ஆர்த்தி என்னை உளவு பார்க்கிறார். என் கை செலவுக்கு கூட பணம் கொடுப்பது இல்லை. எல்லாவற்றிலும் தலையிட்டு டார்ச்சர் செய்கிறார். என் மாமியார் சுஜாதா தயாரிப்பில் நான் நடித்த படங்கள் லாபத்தை கொடுத்த போதும் நஷ்டம் என பொய் கணக்கு காட்டினார். இதனால் சில பிரச்சனைகள் வந்தது. எனக்கு துணையாக இருக்கவேண்டிய ஆர்த்தி அம்மாவின் பக்கம் நின்றார் என புகார்களை அடுக்கிக்கொண்டே போனார் ரவி.
ஆனால், ஆர்த்தி என் மீது எந்த தவறும் இல்லை என்கிற ரேஞ்சில் விளக்கமளித்தார். ஆர்த்தியை பிரிவதாக ரவி அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தியின் தொடர்பு எல்லையை விட்டு போயிருந்தார் ரவி. என்னால் என் கணவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை என புலம்பினார் ஆர்த்தி.
கோவாவில் கெனிஷ்கா என்பவருடன் ரவி தங்கியிருப்பதாக செய்திகள் வெளியானது. பாடகி, மனநல சிகிச்சை அளிப்பவர் என பல முகங்களை கொண்டவர் கெனிஷா. ரவியை அவரோடு தொடர்புபடுத்தி செய்திகள் வரவே ‘ஒரு பெண் மீது இப்படி பழி சுமத்த்தாதீர்கள். அவர் எனக்கு தோழி மட்டுமே’ என விளக்கமளித்தார் ரவி.
சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் இல்லத் திருமண விழாவில் ஜெயம் ரவி கெனிஷாவுடன் கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகவே ரவி மோகனை பல பெண்களே கோபத்துடன் திட்டினார்கள். ஒருபக்கம், ரவி எனக்கு சோல் மேட்தான் என பேட்டி கொடுத்தார் கெனிஷா.
இந்நிலையில், மும்பையில் கெனிஷாவுக்கு 10 கோடியில் ஒரு வீட்டை வாங்கி கொடுத்திருக்கிறாராம் ரவி. மேலும், கோவாவில் 5 கோடி செலவில் மனநல சிகிச்சை செய்யும் மையத்தையும் அமைத்து கொடுத்திருக்கிறார் என்கிற செய்தி வெளியே கசிந்துள்ளது. தோழி என்கிற முறையில் ரவி இதை செய்திருந்தாலும் எல்லோரும் இதை சரியாக புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பதே நிதர்சனம். ஒருபக்கம் ரவி - கெனிஷா இடையே இருக்கும் உறவு வெறும் நட்பு மட்டும்தானா என்பது விரைவில் தெரியவரும்.