அந்த நடிகருக்காக தனுஷுக்கு No சொன்ன பூஜா ஹெக்டே!.. D54 படத்தில் நடந்தது என்ன?!...

Pooja Hegde: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டவர். பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டவர். குறிப்பாக தனது அண்ணன் செல்வராகவனிடம் சினிமா கற்றுக்கொண்டர் இவர். நிறைய படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
அதேபோல், பவர் பாண்டி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், இட்லி கடை போன்ற படங்களை இயக்கியும் இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் தனுஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா படம் வெளியானது. இந்த படத்தில் தனுஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் பிச்சைக்காரராக தனுஷ் நடித்திருந்தார். தமிழில் இப்படம் ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் 120 கோடி வரை வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்து போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இது தனுஷின் 54வது திரைப்படமாகும். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். முதலில் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், பட பூஜையில் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ கலந்துகொண்டார். அதன்பின்னரே இந்த படத்தில் அவர் நடிப்பது தெரிய வந்தது.

இந்த படத்தில் நடிப்பது பற்றி பூஜா ஹெக்டேவிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், அவர் சரியான முடிவை சொல்லவில்லை. கொஞ்சம் காத்திருங்கள் என சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பூஜைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை அவர் சரியான பதிலை சொல்லவில்லை. அதனால்தான் மமிதா பைஜுவை கமிட் செய்திருக்கிறார்கள்.
தெலுங்கில் துல்கர் சல்மான் நடிக்கும் ஒரு படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார். அதனால்தான் அவர் தனுஷ் படத்தில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.