ரஜினியே பேசினாலும் இந்தியன் 3 டேக் ஆப் ஆகாது!.. கமல், ஷங்கர் கேட்கும் சம்பளம் இவ்வளவு கோடியா?!..

by MURUGAN |
indian3
X

Indian 3: லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கி கமல் நடித்து வெளியான இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷனும் செய்யப்பட்டது. 1996ல் வெளியான இந்தியன் படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இந்தியன் 2-வும் ஹிட் அடிக்கும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். வழக்கமாக ஷங்கரின் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார். ஆனால், இந்தியன் 2-வுக்கு அனிருத் இசையமைத்தார்.

ஆனால், படம் வெளியான பின் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஷங்கரின் அதே பழைய ஃபார்முலா கிரின்ச்சாக இருக்கிறது. ஷங்கர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள். எனவே, இப்படம் வசூலை பெறவில்லை. பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.

இந்தியன் 2 எடுக்கும்போதே இந்தியன் 3-க்கான காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டார். ஒரு பாடலும், சில கிராபிக்ஸ் காட்சிகளும் மட்டுமே பாக்கி இருக்கிறது. நான் இந்தியன் 2 நடிக்க ஒப்புக்கொண்டதே இந்தியன் 3-க்காகத்தான் என புரமோஷன் நிகழ்ச்சியில் கமல் சொன்னார். ஆனால், இந்தியன் 2 ஹிட் அடிக்கவில்லை என்பதால் கமலும், ஷங்கரும் இந்தியன் 3 பற்றி ஆர்வம் காட்டவில்லை.


சமீபத்தில் ரஜினி ஷங்கர், கமலிடம் பேசி இந்தியன் 3 டேக் ஆப் ஆக உதவியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான் ஒரு முக்கிய விஷயம் தெரிய வந்திருக்கிறது. இந்தியன் 2 உருவான போது கமலுக்கும், ஷங்கருக்கும் தலா 36 கோடி சம்பளம் மற்றும் லாபத்தில் 33 சதவீத பங்கு என பேசியிருக்கிறார்கள். அதேபோல், இந்தியன் 3-க்கு கமலுக்கும், ஷங்கருக்கும் தலா 100 கோடி சம்பளம், லாபத்தில் 25 சதவீதம் என பேசியிருக்கிறார்கள்.

ஆனால், இந்தியன் 2 ஓடவில்லை என்பதால் இந்தியன் 3-க்கு பேசப்பட்ட சம்பளத்தை கொடுக்கும் நிலையில் லைகா இல்லை. கமலும், ஷங்கரும் சம்பளத்தை குறைக்க தயாராக இல்லை. எனவேதான், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினியே பேசினாலும் இந்தியன் 3 டேக் ஆப் ஆகுமா என்பது தெரியவில்லை.

Next Story