அண்ணனுக்காக விட்டுக்கொடுத்த கார்த்தி!. தள்ளி போகும் சர்தா 2 ரிலீஸ் தேதி!..

by MURUGAN |
அண்ணனுக்காக விட்டுக்கொடுத்த கார்த்தி!. தள்ளி போகும் சர்தா 2 ரிலீஸ் தேதி!..
X

சூர்யாவின் கங்குவா படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்காத நிலையில் அவரின் ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1ம் தேதி வெளியானது. இந்த படம் சூர்யா ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திப்படுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதேநேரம், படத்தின் நீளம், மூக்கை சுற்றி கதை தொட்டது என கதை எங்கெங்கோ போய் சுற்றி வருகிறது என்கிற விமர்சனம் எழுந்தது.

இந்த படத்தை சூர்யா, கார்த்திக் சுப்பாராஜ் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார்கள். ஆனால், இந்த படம் லாபம் இல்லை என சில சினிமா பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் விளக்கம் அளிக்கவில்லை.

அவர்கள் இருவரும் தங்களின் அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கிவிட்டனர். சூர்யா இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வழக்கறிஞராகவும், கருப்பண்ண சாமியாகவும் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் திரிஷாவும் நடித்து வருகிறார்.


இந்த படத்திற்கு வேட்டை கருப்பு என தலைப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஒருபக்கம், சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படத்தையும் தீபாவளிக்கே வெளியிட திட்டமிட்டனர்.

ஆனால், ஒரு நல்ல வெற்றிக்காக அண்ணன் சூர்யா காத்திருப்பதால் சர்தார் 2 படத்தின் ரிலீஸை தள்ளி போடுங்கள் என சொல்லிவிட்டாராம் கார்த்தி. அனேகமாக சர்தார் 2 படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஏனெனில், அண்ணனின் படத்திற்கு நம்முடைய படமே போட்டியாக இருக்க வேண்டாம். வேட்டை கருப்பு தனியாக வந்தால் வசூலை பெற்றுவிடும் என கார்த்தி நினைக்கிறாராம்.

அதேநேரம், தீபாவளிக்கு விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் எல்.ஐ.கே படம் வெளியாகவுள்ளது. இது வேட்டை கருப்பு படத்தின் வசூலை பாதிக்குமா என்பது ரிலீஸுக்கு பின்னரே தெரியவரும்.

Next Story