வேள்பாரிக்கு முன்னாடி அந்த படத்தை முடிக்கணும்!. ஷங்கருக்கு செம செக்!...

Indian 3: கோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். அதிக பட்ஜெட்டில் படமெடுத்து தயாரிப்பாளரை கதறவிடும் இயக்குனர்களில் இவர் முக்கியமானவர். ஒரு பாடல் காட்சிக்கே மினிமம் சில கோடிகள் செலவு செய்வார். ராம் சரணை வைத்து இவர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தில் 5 பாடல் காட்சிகளுக்கும் சேர்த்து 80 கோடி வரை செலவு செய்தார். அதில் ஒரு பாடலுக்கு மட்டும் 15 கோடி செலவு செய்தார்.
ஆனால், அப்படி வெளியான கேம் சேஞ்சர் படம் சூப்பர் பிளாப் ஆனது. இப்படத்தை தயாரித்த தில் ராஜுவுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. இந்த படத்திற்கு முன் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படமும் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இந்தியன் படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் லைக்கா தயாரிப்பில் உருவான இந்தியன் 2 ரசிகர்களை கவரவில்லை.
ஷங்கர் இன்னமும் அப்படியே இருக்கிறார். கரண்ட் டிரெண்ட் அவருக்கு தெரியவில்லை. இப்போது அவர் படத்தில் வரும் காட்சிகள் கிரின்ச்சாக இருக்கிறது. அவர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பலரும் சொன்னார்கள். இந்தியன் 2 எடுக்கும்போதே இந்தியன் 3-க்கான காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டார். ஆனால், இந்தியன் 2 ஓடவில்லை என்பதால் இந்தியன் 3 கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

இன்னும் சில கோடிகள் கொடுத்தால் படத்தை முடிக்கிறேன் என்கிறே ஷங்கர். ஆனால், லைக்காவோ கொடுக்க முடியாது என்கிறது. ஒருபக்கம் கமலும் இந்தியன் 3-ல் ஆர்வம் காட்டவில்லை. எனவே, லைக்கா தரப்பு ரஜினி மூலம் இந்த பிரச்சனை தீர்த்து இந்தியன் 3-யை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இந்த படத்திற்காக பேசப்பட்ட சம்பள விஷயத்திலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
ஒருபக்கம் வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்கு முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளார். இந்த கதையை 3 பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருக்கும் ஷங்கர் இதற்காக ஒரு பெரிய தயாரிப்பாளரை எதிர்பார்க்கிறார். ஆனால், இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர் தோல்வியை ஷங்கர் கொடுத்ததால் வேள்பாரியை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. ஒருபக்கம், இந்தியன் 3-வை முடித்துவிட்டு வேள்பாரிக்கு செல்லும் நெருக்கடியும் ஷங்கருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியன் 3 பட வேலைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.