மோகன்லாலால் வெங்கட்பிரபுக்கு வந்த வாழ்வு!.. எஸ்.கே படம் சீக்கிரமே ஸ்டார்ட்!...

by MURUGAN |
sk vip
X

Mohanlal: சென்னை 28 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. நண்பர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு ஜாலியாக படமெடுப்பவர் இவர். இவரின் படங்களில் கதையும் சீரியஸாக இருக்காது. இன்னும் சொல்லப்போனால் பெரிதாக கதையே இருக்காது. இதை அவரே ஒத்துக்கொண்டார்.

அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை. அதன்பின் சிம்புவை வைத்து மாநாடு படத்தை எடுத்தார். இந்த படம் சிம்புவுக்கும் ஒரு கம்பேக் படமாக அமைந்து ஹிட் அடித்தது.

டைம் டிராவல் கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து உருவான இப்படத்திற்கு சிறப்பாக திரைக்கதை அமைந்திருந்தார் வெங்கட் பிரபு. அதோடு, இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இந்த படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் முக்கிய படமாக அமைந்தது.


அதன்பின் விஜயை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுவுக்கு கிடைத்தது. அப்படி உருவான படம்தான் கோட். விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. 450 கோடி வசூலை பெற்றாலும் படத்தின் பட்ஜெட்டே 400 கோடியாக இருந்தது.

இந்த படம் முடிவடையும் நேரத்தில் சிவகார்த்திகேயனை இயக்கும் வாய்ப்பு கிடைக்க கோட் படத்தை முடித்துவிட்டு அந்த படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் வெங்கட்பிரபு. ஆனால், கோட் ரிசல்ட்டை பார்த்துவிட்டு பேக் அடித்தார் சிவகார்த்திகேயன். வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டாத அவர் மதராஸி, பரதேசி போன்ற படங்களில் நடிக்க போனார்.

பல மாதங்கள் பல வழிகளில் வெங்கட்பிரபு முயற்சி செய்ததால் ஒருவழியாக ஓகே சொன்னார் சிவகார்த்திகேயன். ஆனால், சிவகார்த்திகேயன் அடுத்து குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகர் இயக்கதில் நடிப்பதாக முடிவெடுத்தார். இது தொடர்பான அறிவிப்புகளும் வெளியானது. இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், வினாயக் சந்திரசேகர் படம் இப்போதைக்கு டேக் ஆப் ஆக வாய்ப்பில்லை. ஏனெனில், இந்த படத்தில் தன்னுடைய அப்பாவாக மோகன்லால் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால், ‘என்னிடம் கால்ஷீட் இல்லை. அடுத்த வருடம் மார்ச் மாதம் தேதி தருகிறேன்’ என மோகன்லால் சொல்லிவிட்டார். எனவே, வெங்கட்பிரபுவை அழைத்து ‘நம் படத்தை துவங்குவோம்’ என சிவகார்த்திகேயன் சொல்லிவிட்டாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

Next Story