கேன்சர் நோய்!.. சென்னையில் நடிகரின் வீட்டில் 2 மாதங்கள் தங்கியிருந்த அமீர்கான்!. பகீர் செய்தி!...

Amirkhan :பாலிவுட்டில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவருக்கு பல பெண் ரசிகைகள் உண்டு. 90களில் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் மூவரும் பல காதல் படங்களில் நடித்தனர். சல்மான்கானும், ஷாருக்கானும் ஆக்ஷன் ரூட்டுக்கு போனாலும் அமீர்கான் நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளில் நடிக்க துவங்கினார்.
அமீர்கானை பாலிவுட் கமல் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல புதிய முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறார். இவரின் லகான் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. அமீர்கானின் பல ஹிந்தி படங்கள் ஹிந்தி மொழியிலேயே வெளியாகி வசூலை பெற்றிருக்கிறது. இவரின் பி.கே. படமும் பேசப்பட்டது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார். விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் வேடம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது போல கூலியில் அமீர்கானின் டாஹா வேடம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், நடிகர் விஷ்ணு விஷாலின் குடும்பத்தோடு அமீர்கான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. விஷ்ணு விஷாலின் குழந்தைக்கு அமீர்கான் மீரா என பெயரும் வைத்தார். எனவே, விஷ்ணு விஷாலுக்கும் அமீர்கானுக்கும் இடையே எப்படி நெருக்கமான உறவு உண்டானது என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. தற்போது அதற்கு விஷ்ணு விஷாலே விளக்கமளித்திருக்கிறார்.

2023ம் வருடம் அமீர்கானின் அம்மா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான ஒரு குறிப்பிட்ட சிகிச்சை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொடுக்கப்பட்டது. எனவே, அதற்காக சென்னை வந்தார். மருத்துவமனை அருகே அவருக்கு தங்க சரியான இடம் அமையவில்லை. அதோடு, அவர் சில படங்களில் நடித்து கொண்டிருந்தார். அது தொடர்பான அலுவலக பணிகளையும் செய்ய வேண்டியிருந்தது.

ஒரு புது வீட்டு கட்டியிருந்தேன். அது மருத்துவமனை அருகிலேயே இருந்தது. அந்த வீட்டை அவருக்கு கொடுத்தேன். அதோடு, அருகேயிருந்த என் அலுவலகத்தையும் அவருக்கு கொடுத்தேன். 2 மாதங்கள் அவர் தனது டீமுடன் அங்கே தங்கியிருந்தார். அங்கிருந்து மும்பை கிளம்பும்போதுதான் சென்னை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டார். அப்போதுதான் புகைப்படங்கள் வெளியானது.
என் மனைவி ஜூவாலாவுக்கு 2 வருடங்களாக குழந்தை இல்லை. எனவே, இங்கு சில மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். இதை கேள்விப்பட்டதும் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு மும்பை வர சொன்னார் அமீர்கான். என் மனைவியை 10 மாதங்கள் அமீர்கானின் அம்மாவும், சகோதரியும் பார்த்துக்கொண்டனர். சிகிச்சையில் என் மனைவிக்கு குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்குதான் அமீர்கான் பெயர் வைத்தார்’ என சொல்லியிருக்கிறார்.