போட்றா வெடிய!.. கூலி செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட் வந்தாச்சி!. எப்ப தெரியுமா?...

Coolie Monica song: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் கூலில். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு பேன் இண்டியா படமாக உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவ்ராஜ்குமர் நடித்ததால் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அப்படம் நல்ல வசூலை பெற்றது.
எனவே, அதே வியாபார யுக்தியை கூலி படத்திலும் பயன்படுத்தியுள்ளார்கள். அதோடு, பாலிவுட் நடிகர் அமீர்கானும் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். எனவே, இதுவும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லோகேஷ் கனகராஜின் முந்தையை படங்களை போலவே இந்த படமும் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது.
வருகிற ஆகஸ்டு 14ம் தேதி கூலி படம் வெளியாகவுள்ளது. எனவே, படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சிக்கிடு பாடல் வெளியானது.

இந்த பாடலை அனிருத்தும், டி.ராஜேந்தரும் இணைந்து பாடியிருந்தனர். அதோடு, இந்த பாடல் தொடர்பாக வெளியான வீடியோவும், அனிருத்தும், டி.ராஜேந்தரும் அசத்தலாக நடனமும் ஆடியிருந்தார்கள். இந்த பாடல் ரஜினியின் அறிமுக பாடலாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற செகண்ட் சிங்கிள் ‘மோனிகா’ வருகிற 11ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கிறார். மேலும், சௌபின் சாஹிர் உள்ளிட்ட சிலரும் இந்த பாடலில் நடனமாடியுள்ளனர். அனேகமாக பூஜா ஹெக்டேவோடு நாகார்ஜுனாவும் இணைந்து நடனமாடியிருப்பார் என கணிக்கப்படுகிறது.