மொரட்டு லுக்கில் அமீர்கான்!. செம மாஸ்!.. கூலி படத்தின் புது போஸ்டர் அள்ளுதே!...

Coolie poster: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் கூலி. ரஜினி முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பல மொழிகளிலும் வசூலை அள்ளுவதற்காக தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, மலையாளத்திலிருந்து சௌபின் சாஹிர், கன்னடத்திலிருந்து உபேந்திரா ஆகியோரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜுக்கென்றே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் ரஜினியை வைத்து படம் இயக்கியிருப்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது. லோகேஷின் வழக்கமான ஸ்டைலில் ஒரு அசத்தலான கேங்ஸ்டர் படமாக கூலி உருவாகியுள்ளது. வழக்கமாக போதை மருந்து பின்னணியில் லோகேஷ் கதை அமைப்பார்.
கூலி படத்தில் தங்க நிற வாட்ச் காட்டப்படுகிறது. எனவே, புதிதாக ஏதோ ஒன்றை அவர் முயற்சி செய்திருப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல், இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை அனிருத்தும், டி.ராஜேந்தரும் இணைந்து பாடியிருந்தனர். அனேகமாக இது ரஜினியின் அறிமுக பாடலாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார். விக்ரம் படத்தில் ரோலக்ஸாக சூர்யா வந்தது போல அமீர்கானுக்கு இந்த படத்தில் ரசிகர்களை கவரும் வேடம் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் ஒரு புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

அதில், அமீர்கான் கருப்பு நிற பனியன் அணிந்து புகைப்பிடித்தபடி ஸ்டைலாக நிற்பது போல் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் மொரட்டு லுக்.. செம மாஸ்.. என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள். அனேகமாக கூலி படத்தில் அமீர்கான் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. இந்த படத்தில் அமீர்கான் டாஹா என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார்.