இளையராஜா வீட்டுக்கு நான் மருமகளா போயிருக்கணும்!. கதறி அழுத வனிதா விஜயகுமார்!...

Ilayaraja: குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவரை போல சர்ச்சையிலும், செய்திகளிலும் அடிபட்ட ஒரு பெண் இருப்பாரா தெரியவில்லை. திருமண விஷயத்தில் இவர் எடுத்த முடிவுகளால் அப்பா விஜயகுமார் உள்ளிட்ட இவரின் குடும்பத்தினர் இவரை ஒதுக்கி வைத்தனர். அவர்கள் யாரும் வனிதாவுடன் பேசுவதை கூட நிறுத்திவிட்டனர்.
பீட்டர்பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். ஆனால், அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. குடிப்பழக்கத்திற்கு அடிமையான பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். பீட்டர் பாலை திருமணம் செய்தால் பீட்டரின் முன்னாள் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பல பிரச்சனைகளை சந்தித்தார் வனிதா. பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவாக பேசிய லட்சுமி ராமகிருஷ்ணனை ‘நீ யாருடி இதுல தலையிட’ என திட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பின் அதிலிருந்து வெளியேறி சினிமாவில் நடிக்க துவங்கினார். பவர்ஸ்டார் சீனிவாசனுடன் ஒரு படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் வெளியாகவில்லை. அதன்பின் வனிதாவே கதாநாயகியாக நடித்து Mrs & Mr என்கிற படம் உருவானது. வனிதாவின் மகள் ஜோவிகா இப்படத்தை தயாரிக்க பிரபல நடன இயக்குனர் ராபார்ட் மாஸ்டர் இதில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்காக கடந்த சில நாட்களாகவே மீடியாவிடம் தொடர்ந்து பேசி வந்தார் வனிதா. மிகவும் கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். மக்கள் தியேட்டருக்கு வந்து இப்படத்தை பார்க்க வேண்டும். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்’ என வனிதாவும், அவரின் மகளும் கோரிக்கை வைத்தார்கள். இந்த படம் இன்று காலை ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், இந்த படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்ற ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்கிற பாடல் பயன்படுத்தியதற்காக இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இத்தனைக்கும் படம் துவங்கும்போது இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் வனிதா.
இதுபற்றி ஊடகங்களிடம் பேசிய வனிதா ‘ இளையராஜா ஒரு லெஜெண்ட். அவரை சந்தித்து ஆசி பெற்றேன். ஆனால், நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அவரின் வீட்டில் நான் நிறைய வேலைகள் செய்திருக்கிறேன். பழசையெல்லாம் பேச முடியாது. அவரின் வீட்டு மருமகளாக நான் இருந்திருக்க வேண்டியது’ என அழுதுகொண்டே சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டார். இதற்கு பின்னால் என்ன கதை என்பதை வனிதா விரைவில் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.