எஸ்.கே-வுக்காக ஹிஸ்ட்ரியை மாற்றும் வெங்கட் பிரபு!.. அவருக்கும் வேற வழி இல்ல!..

Sivakarthikeyan: அமரன் ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் விர்ரென மேலே போய்விட்டது. ஏனெனில் அப்படம் 300 கோடி வசூலை தாண்டிவிட்டது. அதற்கு முன் 40 லிருந்து 50 கோடி வரை சம்பளம் வாங்கிவந்த சிவகார்த்திகேயன் அமரன் ஹிட்டுக்கு பின் 70 கோடி சம்பளம் கேட்கிறார். அதோடு பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பது என முடிவெடுத்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதாகொங்கரா இயக்கத்தில் மதராஸி போன்ற படங்களில் நடிக்க துவங்கினார். இதில் பராசக்தி மிகவும் முக்கியமான படமாகும். ஏனெனில், 1960களில் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதையாகும். இதிலிருந்து சூர்யா விலகவே சிவகார்த்திகேயன் உள்ளே போய்விட்டார்.
ஒருபக்கம், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருந்தார். ஏனெனில், விஜயின் இடத்தை பிடிக்கப்போவது சிவகார்த்திகேயன்தான் என பலரும் பேச கோட் படத்தில் விஜயை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கலாம் என திட்டமிட்டார். ஆனால் கோட் படத்தின் ரிசல்ட் பெரிதாக இல்லை என்பதால் வெங்கட்பிரபுவை டீலில் விட்டார்.
எனவே, பல மாதங்களாக சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைக்க முயற்சிகள் செய்தார். இடையில், பராசக்தி படத்திற்கு பின் குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டார். அறிவிப்பும் வெளியானது. ஏற்கனவே டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவும் பேசப்பட்டது. அதில் சில குளறுபடிகள் நடக்கவே வினாயக் சந்திரசேகர் உள்ளே வந்தார். ஆனால், அந்த படத்தில் நடிக்க மோகன்லால் தேவைப்பட்டார். ஆனால், அவரின் கால்ஷீட் கிடைக்க தாமதமாகும் என்பதால் மீண்டும் சிபி சக்ரவர்த்தி உள்ளே வந்தார்.

ஆனால், சிவகார்த்திகேயன் அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறரா அல்லது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை. ஒருபக்கம், வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன் இணையும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்கிறார்கள். வெங்கட்பிரபுவின் முதல் படத்திலிருந்து கோட் வரை அவருக்கு யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து வந்தார். வேறு இசையமைப்பாளரிடம் அவர் போனதே இல்லை. ஆனால், சிவகார்த்திகேயன் அனிருத்தின் இசையையே விரும்புவார் என்பதால் வேறு வழியில்லாமல் வெங்கட்பிரபு ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. சிபி சக்ரவர்த்தி படத்திற்கு பின் வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பரா என்பது தெரியவில்லை.