Suriya46: சூர்யாவுக்கு இன்னொரு சஞ்சய் ராமசாமி!.. ஹைப் ஏத்தும் லக்கி பாஸ்கர் பட இயக்குனர்!...

Suriya46: தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சூர்யா கடந்த சில வருடங்களாக ஒரு தரமான வெற்றிப்படத்தை கொடுக்க முடியாமல் திணறி வருகிறர். சிங்கம் 2-வுக்கு பின் அவருக்கு இன்னமும் ஒரு சூப்பர் ஹிட் அமையவில்லை. ஓடிடியில் நேரடியாக வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய 2 படங்கள் மட்டுமே வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை என்பதால் அது கணக்கில் வரவில்லை.
சூர்யாவின் நடிப்பில் அதிக ஹைப் ஏற்றப்பட்ட திரைப்படம் கங்குவா. அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சிறுத்தை சிவா இயக்கிய படம் இது. இந்த படம் 2 ஆயிரம் கோடியை வசூலிக்கும் என்றெல்லாம் இப்படத்தின் தயாரிப்பாளர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசினார். ஆனால், முதல் காட்சி வெளியானவுடனேயே நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.
அதிலும் சூர்யாவை பிடிக்காத ஒரு குரூப் கங்கணம் கட்டிக்கொண்டு இப்படத்திற்கு எதிராக களம் இறங்கி சமூகவலைத்தளங்களில் நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டனர். அதோடு, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களும் படம் நன்றாக இல்லை என சொன்னதால் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.
அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். இந்த படம் சூர்யாவுகு ஓரளவுக்கு கை கொடுத்தாலும் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை. இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் இப்படம் தனக்கு சூப்பர் ஹிட் படமாக அமையும் என சூர்யா நம்புகிறார்.
கருப்பு படத்திற்கு பின் லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரோடு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வெங்கி அட்லுரி ‘பல வருடங்களுக்கு பின் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு வெற்றிப்படமாக இந்த படம் இருக்கும். மனித உணர்வுகளை இந்த படம் பேசும். கஜினி படத்தில் சூர்யா ஏற்ற சஞ்சய் ராமசாமி போல இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் பேசப்படும்’ என சொல்லி ஹைப் ஏற்றியிருக்கிறார்.