அடிமேல் அடி வாங்கும் விக்னேஷ் சிவன்!.. எல்.ஐ.கே படத்துக்கு வந்த ஆப்பு!. ரிலீஸான மாதிரிதான்!...

by MURUGAN |
lik
X

Vignesh shivan: நடிகை நயன்தாராவை உஷார் பண்ணி திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் விக்னேஷ் சிவன். தயாரிப்பாளர்களை பற்றி இவர் எப்போதும் எந்த கவலையும் படமாட்டார். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வார். நடிகர் தனுஷ் இவரை நம்பி தனது தயாரிப்பில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

ஆனால், விக்னேஷ் சிவனோ நயன்தாராவை எப்படி உஷார் பண்ணலாம் என யோசித்து ஷூட்டிங் ரொமான்ஸ் செய்ததோடு, பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார். ஷூட்டிங்கில் விக்கியும், நயனும் அடிக்கும் லூட்டியை கேள்விப்பட்டு ஒருகட்டத்தில் கடுப்பான தனுஷ் ‘இனிமேல் நான் காசு கொடுக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டார். எனவே, காதலனுக்காக நயனே சொந்த காசை கொடுத்தார். அப்படி வெளியான படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், நயன், விக்கி ஆகியோரிடம் பேசுவதையே தனுஷ் நிறுத்திவிட்டார்.

நயன்தாரா மூலம் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. ஆனால், அஜித் சொன்ன எதையுமே விக்கி கேட்கவில்லை. இதில் கடுப்பான அஜித் அவரை படத்திலிருந்து தூக்கிவிட்டார். அதன்பின்னர்தான் மகிழ் திருமேனி நடிக்க விடாமுயற்சி படம் உருவானது. அஜித் பட வாய்ப்பை இழந்த விக்கி லவ் டுடே ஹிட்டுக்கு பின் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கினார்.அப்படி உருவான படம்தான் எல்.ஐ.கே. முதலில் எல்.ஐ.சி என தலைப்பு வைக்கப்பட்டு அது பிரச்சனையானதால் எல்.ஐ.கே என மாற்றினார்.


மாஸ்டர், லியோ ஆகிய படங்களை தயாரித்த லலித்குமார் இப்படத்தை தயாரிக்க முன்வந்தார். ஆனால், சொன்ன பட்ஜெட்டை தாண்டி படம் எடுத்ததால் கடுப்பான லலித்குமார் ‘இனிமேல் நான் காசு கொடுக்க மாட்டேன்’ என சொல்ல பல மாதங்கள் ஷூட்டிங் நடக்கவில்லை. படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. படத்தின் பட்ஜெட் 70 கோடி. இப்படம் இந்த மாதம் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ளது. 2 வருடத்திற்கு வட்டி போட்டால் 110 கோடி வருகிறது. பிரதிப் ரங்கநாதனுக்கு அவ்வளவு வியாபாரம் இல்லை. எனவே, லலித்குமார் கலக்கத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், அடுத்த ஏழரையையும் இழுத்து வந்திருக்கிறார் விக்கி. தெலுங்கில் முக்கிய படங்களுக்கு நடனம் அமைத்து வந்த ஜானி மாஸ்டர் பாலியல் புகாரில் சிக்கி சிறைக்கு போனதால் தெலுங்கு சினிமா உலகம் அவரை புறக்கணித்துவிட்டது. ஆனால், அவரை கூட்டிவந்து எல்.ஐ.கே படத்தில் ஒரு பாடலுக்கு பயன்படுத்தியிருக்கிறார் விக்கி. இதைத்தொடர்ந்து, எல்.ஐ.கே படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகாது என்கிறார்கள்.

லவ்டுடே ஹிட்டுக்கு பின் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆந்திராவில் ஒரு பிஸ்னஸ் இருக்கிறது. விக்னேஷ் சிவன் செய்த வேலையில் அதுவும் போச்சே என அப்செட் ஆகியிருக்கிறாராம் லலித். எனவே, விரைவில் விக்கியுடன் பேசி முடிவெடுத்து நஷ்டத்திலிருந்து தப்பிக்க அவர் முயற்சி செய்வார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Next Story