எம்ஜிஆருக்கு போட்டியாக நின்ன நடிகை!.. வாள்சண்டை வித்தையில் தலைவரையே தூக்கி சாப்பிட்ட சம்பவம்!..

Published on: January 14, 2023
mgr
---Advertisement---

எம்ஜிஆர் படங்கள் ரசிகர்கள் விரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர் ஏற்று நடிக்கும் சண்டைக் காட்சிகள் தான். அதுவும் சரித்திர படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதில் வாளை ஏந்திக் கொண்டு அவர் போடும் சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் ஒரு வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும்.

mgr1
mgr1

முக்கியமாக எம்ஜிஆருக்கு சரிக்கு சமமாக போட்டியிட தகுதியான ஒரே ஆள் நடிகர் நம்பியார் தான். இருவரும் அந்த அளவுக்கு பிரம்மாதமாக நடித்திருப்பர். இந்த நிலையில் வாள்சண்டை ஒரு படத்திற்காக கதா நாயகியுடன் போடும் மாதிரியான காட்சிகள் இடம் பெற்றிருந்தனவாம்.

ஆனால் எம்ஜிஆர் சண்டை போட மறுத்துவிட்டாராம். டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பில் உருவான படம் தான் ‘புதுமைப்பித்தன்’. இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக பி.எஸ்.சரோஜா நடித்திருப்பார். பி.எஸ். சரோஜா டி.ஆர்.ராமண்ணாவின் மனைவியும் கூட. இந்த படத்தில் டி.ஆர். ராமண்ணாவின் சகோதரியும் நடிகையுமான டி.ஆர்.ராஜகுமாரியும் மற்றும் டி.ஆர்.ராமண்ணாவின் இன்னொரு மனைவியான நடிகை இ.வி.சரோஜாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பர்.

mgr2
mgr2

புதுமைப்பித்தன் படத்தில் ஒரு காட்சியில் பி.எஸ்.சரோஜாவும் எம்ஜிஆரும் மோதும் வாள் சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் எம்ஜிஆர் முடியாது என மறுத்திருக்கிறார். அதுவும் ஒரு பெண்ணோடு சண்டை போடுவதை என் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற காரணத்தையும் கூறியிருக்கிறார்.

இதை கேட்ட ராமண்ணா வேண்டும் என்றால் இடது கையால் இந்த தடவை சண்டை போடுங்கள், அதை ரசிகர்கள் விரும்பி பார்க்கும் போது இதை மறந்து விடுவார்கள் என்ற ஐடியாவை சொல்லியிருக்கிறார். ஏனெனில் பி.எஸ்.சரோஜாவுடன் சண்டை போடும் காட்சி படத்திற்கு தேவைப்படுவதால் அதை நிராகரிக்க முடியவில்லை ராமண்ணாவால்.

mgr3
mgr b.s.saroja

அதனால் அவர் சொன்ன ஐடியாவை கேட்டு எம்ஜிஆரும் ஒப்புக் கொண்டு நடித்தார். அதிலும் குறிப்பாக பி.எஸ்.சரோஜா இயல்பாகவே தைரியசாலி பெண். எதையும் துணிந்து ஏற்று நடிக்கும் நடிகையும் கூட. இந்த காட்சிக்காக முறையாக வாள்சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.