பலூன் கதைனு சொல்லி விஜயை புஸ்ஸுனு ஆக்கிய புஸ்ஸீ ஆனந்த்.. வச்சு செய்த நெட்டிசன்கள்

vijay_bussy
நடிகர் விஜய் என்று மாறி தவெக தலைவர் விஜய் என்று இப்போது பரபரப்பாக பேசப்படுகிறார் தளபதி விஜய். தனியாக கட்சியை ஆரம்பித்து கட்சிக்கொடியினையும் அறிமுகப்படுத்தி அரசியலில் ஒரு தீவிர புரட்சியை செய்து வருகிறார். இவருக்கு கீழ் இவருடைய தொண்டர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக நினைத்த இலக்கை அடைய வேண்டும் என்ற முயற்சியில் விஜய் உள்பட ஒட்டுமொத்த தொண்டர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
பெரிய அளவில் மாநாட்டை நடத்தி அதில் வெற்றியும் கண்டார் விஜய். அதன் பிறகு நடந்த பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டு நாட்டில் நடக்கும் பிரச்சனைகள், நாட்டில் நடக்கும் அராஜகம், அரசுக்கு எதிரான தனது தீர்மானங்கள் என அனைத்தையும் தைரியமாக மேடையில் கூறி அனைவரையும் சர்ப்ரைஸ் செய்தார் விஜய். சமீபத்தில் மீண்டும் ஒரு பொதுக்குழுவை கூட்டி சில தீர்மானங்களை நிறைவேற்றினார் விஜய்.

அதில் விஜய் பேசியது தவிர பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதுதான் மிகவும் ட்ரெண்டிங் ஆக மாறியது. அதிலும் குறிப்பாக பலூன் கதை ஒன்றை சொல்லி இப்படி தற்குறிகள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு ஒரு கதையை சொன்னார் புஸ்ஸி ஆனந்த். அதாவது இந்த கட்சியில் ஒரு தொண்டர் இருந்தாராம். அவருக்கு இருந்த ஒரே கவலை அண்ணே நான் ஒரு பலூன் விட்டேன்.
அந்த பலூனை எப்படியாவது வாங்கி கொடுங்க அண்ணே என்று கூறினாராம். பலூன்தானடா விட்டுட்டு போயேன்டா என்று இவர் சொன்னாராம். அதற்கு அந்த தொண்டர் பலூன் சாதாரண பலூன் ஆக இருந்தால் ஓகே. என்னுடைய தலைவனுடைய படத்தை போட்ட பலூனை எடுத்து போலீஸ் போயிட்டாண்ணே. அந்த பலூனை கொஞ்சம் வாங்கி கொடுங்க அண்ணே அப்படின்னு சொன்னாராம்.

அதுக்குத்தான் நம்முடைய வழக்கறிஞர்கள் எல்லோரும் இருக்கிறார்களேடா வாங்கிக்கலாம் என்று சொன்னாராம். அதற்கு அந்த தொண்டர் இல்லை எனக்கு என் தலைவன் புகைப்படம் போட்ட அந்த பலூன் தான் வேணும் என்று கேட்கக்கூடிய ஒரு உண்மையான தொண்டன் இருக்கிற கட்சிதான் நம்முடைய கட்சி என்ற ஒரு கதையை சொன்னார் புஸ்ஸி ஆனந்த். இது மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. இதைப் பற்றி எக்ஸ் வலைதள பக்கத்திலும் பெரிய அளவில் மீம்ஸ் கிரியேட் செய்து விஜயையும் புஸ்ஸி ஆனந்தையும் வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.