இரண்டு மாதங்களுக்கு பிறகு மறுபடியும் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ் நாட்டில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு இன்று விஜய் ஈரோட்டில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கி இருக்கிறார். ஈரோட்டில் உள்ள விஜயமங்கலம் கிராமத்தில் இருக்கும் ஒரு திடலில் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. அதற்காக விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று கோவை விமானத்தை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து கார் வழியாக விஜயமங்கலம் பகுதியை வந்தடைந்தார். விஜய் வரும் வழியெல்லாம் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஒரு சில பகுதிகளில் நெடுஞ்சாலை முழுவதும் மக்கள் கூட்டத்தால் அந்த சாலை முழுவதும் நிரம்பி வழிந்தது. ஆனாலும் அவர்களுக்கு கைசைத்தப்படியே அவர்களை உற்சாகப்படுத்தி வந்தர் விஜய்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு மிகுந்த பாதுகாப்புடன் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. முதன் முறையாக ஈரோட்டில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். விஜய் வருவதற்கு முன்பே திடலில் ஏராளமான மக்கள் கிட்டத்தட்ட நான்குமணி நேரமாக காத்துக் கொண்டிருந்தனர். அதில் நேற்று இரவிலிருந்தே ஈரோட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் விஜயமங்கலம் வந்து சேர்ந்தனர்.
தேசிய நெடுஞ்சாலை வழியாக மக்கள் விஜயின் காரை பின் தொடர்ந்து வந்தனர். விஜயின் காரை விரட்டி ஓட்டினாலும் அவர்களை பின் தொடர்ந்து ரசிகர்களும் விஜயின் காரை விரட்டி வந்தனர். எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் அண்ணனை பார்க்காமல் எப்படி இருப்போம்? அவரை நேரில் பார்த்தால்தான் எங்களுக்கு நிம்மதி என கூறி எத்தனையோ பேர் குழந்தைகளுடன் வருவதையும் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் கூட்டத்தில் ஒரு காமெடியான சம்பவம் நடந்திருக்கிறது. அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது. அதாவது கூட்டத்தை புஸ்ஸி ஆனந்த் ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் குழந்தையை கொஞ்சுவது போல புஸ்ஸி ஆனந்தின் கன்னத்தை பிடித்து அழகாக கொஞ்சி விளையாடினார். அதற்கு புஸ்ஸீ ஆனந்த் க்யூட்டான சிரிப்பை வெளிப்படுத்தினார். அந்த வீடியோதான் வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/i/status/2001518326787543269
