More
Categories: Cinema News latest news

ஹாலிவுட்டில் கால் பதித்த சமந்தா.. அவெஞ்சரின் புதிய கேப்டன் மார்வலா..? வெளியான வீடியோ…

Samantha: டான்ஸ், வெப் சீரிஸ் என இருந்த கலகல சமந்தாவின் கேரியர் கடந்த சில வருடங்களாக ஆட்டம் கண்டு இருந்தது. அவரின் நோய் பிரச்னை ஒரு பக்கம் என அவர் ஆளே சற்று கலங்கி போய் இருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு சுவாரஸ்ய தகவல் இணையத்தினை ஆக்கிரமித்து இருக்கிறது.

சென்னை பொண்ணான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். தமிழ் முகம், துருதுரு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவருக்கு தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கொடி கட்டி பறந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சின்னவீடு படத்தால் நடந்த களேபரம்… கடைசியில் மன்னிப்பே கேட்கும் நிலைக்கு போனாராம் பாக்கியராஜ்..!

தன்னுடன் நடித்த சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தும் பிஸியாக நடித்து வந்தார் சமந்தா. அந்த சமயத்தில் தான் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டார்.

அதே நேரத்தில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸிலும் க்ளாமர் காட்டி நடித்தார். இது சைதன்யாவுக்கு பிடிக்காமல் போக ஒரு கட்டத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதையடுத்து சமந்தாவுக்கு மைஸ்டியோஸ் என்ற வியாதி இருப்பதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: விஜய் சொல்லாதத அஜித் என்கிட்ட சொன்னாரு! இவ்ளோ பர்ஷனல இப்படியா ஓப்பனா சொல்றது?

இதையடுத்து சினிமாவில் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார். தற்போது சமந்தா மார்வல் ரீமுடன் இருக்கும் ஒரு வீடியோ வைரலானது. அதிலும் சமந்தா தான் அடுத்த கேப்டன் மார்வல் என்று கூட தகவல்கள் கசிந்தது. மார்வல் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த படங்களில் இனி சமந்தா நடிப்பாரா? இல்லை ஹைதராபாத்தில் நடந்ததால் சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என தொடர்ந்து இணையத்தில் பேச்சுகள் எழுந்து வருகிறது. இதுகுறித்து எதுவும் மேலும் தகவல்கள் கசியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா மார்வெல் நிகழ்ச்சியின் வீடியோவைக் காண: https://twitter.com/_introvertboy__/status/1720394951492837760

Published by
Akhilan

Recent Posts