Connect with us

Cinema News

ரைட்டு… அடுத்ததா? தளபதி69ஐ இயக்க போவது இந்த இயக்குனரா? ஆனா நடக்குமா?

Thalapathy69: விஜய் நடிப்பில் கடைசி படமாக உருவாக இருக்கும் படத்தினை யார் இயக்குவார் என்ற சஸ்பென்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் தற்போது அந்த லிஸ்ட்டில் புதிதாக ஒரு இயக்குனர் இணைந்து இருக்கிறார். 

கோலிவுட்டின் மாஸ் ஹீரோ, கிட்டத்தட்ட பல கோடிகளில் வியாபாரம் செய்யும் ஹீரோ, பாக்ஸ் ஆபிஸ் கிங் என உச்சத்தில் இருக்கும் போது சில நடிகர்கள் எடுக்க தயங்கும் முடிவை அசால்ட்டாக எடுத்து இருக்கிறார் விஜய். சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஒருவழியா கல்யாணத்துக்கு பிளான் பண்ணிட்டாங்க போலயே!… பாக்கியாக்கு இருக்க பிரச்னைல இதுவும் ஒன்னா?

அதற்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் சினிமாவில் அவரின் கடைசி திரைப்படம் 69வது படமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என அறிவிப்புகள் கசிந்தது. அடுத்து அந்த போட்டியில் ஹெச்.வினோத் இணைந்தார். இருவருக்குமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் கசிந்ததால் பரபரப்பானது. ஆனால் தற்போது இயக்குனராக இன்னொருவரும் போட்டியில் இணைந்து இருக்கிறார். இயக்குனர் வெற்றி மாறன் தான் விஜயின் அடுத்த படத்தினை இயக்க போகிறார். அப்படத்தினை டிவிவி நிறுவனம் தயாரிக்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே வெற்றிமாறன் விஜயிற்கு கதை சொல்லி இருந்ததாகவும் அதற்குரிய பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும் தெலுங்கு திரையுலகத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

இதையும் படிங்க: தியேட்டருல மட்டும் இல்ல ஓடிடியிலும் மோதி பார்த்திடலாமா? இந்த வார ஓடிடி ரிலீஸ்…

அடுத்த மாத இறுதியில் தான் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட் படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கும் சூழலில் அந்த இயக்குனர் யாராக இருப்பார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் இப்போதே உருவாகிவிட்டது.

google news
Continue Reading

More in Cinema News

To Top