சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மக்களின் அபிமானங்களை பெற்ற கலைஞராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தனக்கென தனி முத்திரை பதித்து ஏகப்பட்ட ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கு மேல் நடித்து சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் .எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்த் .
அதைப்போல அரசியலிலும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அரசியலில் குதித்த குறுகிய காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவுக்கு எதிராக சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் விஜயகாந்த். அவர் இறங்கும் இடம் கெத்து என்பதைப் போல ஒரே பரபரப்பாக தான் இருக்கும் .இந்த நிலையில் சத்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் ஒரு படம் உருவாகுவதாக இருந்ததாம்.
இதையும் படிங்க: திருப்பதியில் சந்தானம்.. லட்டு கொடுக்கப்போன ரசிகர்! சந்தானத்தின் ரியாக்ஷனை பாருங்க
அதைப்பற்றி சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்கு முன் சத்யராஜ் 25 ஆவது ஆண்டு விழாவை தமிழ் சினிமா கொண்டாடியது. அப்போது விஜயகாந்த் மேடையில் தோன்றி சத்யராஜ் எனக்காக ஒரு கதை சொன்னார். ஆனால் அந்த படம் எடுக்க முடியாமல் போய்விட்டது என்ற ஒரு தகவலை கூறி இருப்பார் .இதைப் பற்றி சத்யராஜிடம் கேட்டதற்கு ‘ஆமாம் நூறாவது நாள் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது விஜயை சந்தித்து அவருக்காக ஒரு கதை சொன்னேன் .
அதைக் கேட்டதும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது .உடனே பண்ணலாம் என கூறினார். ஆனால் நூறாவது நாள் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு பிறகு நான் பிஸியாகிவிட்டேன். அதனால் என்னால் அவரை வைத்து இயக்க முடியவில்லை. அதனால் அந்த கதையை தெலுங்கில் விற்று விட்டேன். தெலுங்கில் அந்தக் கதையை கர்ஜா தொங்கன் என்ற பெயரில் மணிவண்ணன் இயக்கினார்.
இதையும் படிங்க: திருமண விழாவில் நயன்!.. அட நம்ம தனுஷும் போயிருக்காரே!.. அதுவும் இவ்வளவு பக்கத்துலயா!..
அதில் சுமன் ஹீரோவாகவும் விஜயசாந்தி ஹீரோயின் ஆகவும் நடித்திருந்தனர். அந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது’ என கூறினார் சத்யராஜ் .தற்போது சத்யராஜ் கூலி திரைப்படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல ஜீப்ரா என்ற படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .தமிழ் தெலுங்கு கன்னடம் என அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் சத்யராஜ்.
Biggboss Tamil:தமிழ்…
2017 மே…
விவாகரத்துக்கு பிறகு…
முன்பெல்லாம் சினிமா…
தமிழ் சினிமாவில்…